ராகுல்காந்தி புகழாரம்
புதுடெல்லி, ஆக.10- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘நவீன தமிழ் நாட்டை உருவாக்குவதற்கு தலைவர் கலைஞர் அவர் களின் மிகக்சீரிய பங்க ளிப்பை நினைவு கூர்வதாகவும் அதேசமயம் மதிப்பதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு மிளிரச் செய்வதற்கான சமூகப் புரட்சியை உருவாக்கிய தளகர்த்தர்களில் ஒருவர் என்பது மட்டுமல்ல; கூட்டாட்சி அமைப் பிலான மாநில விருப்பங்களை உறுதி செய்வதற்காக போராடி யவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்’ என்றும் அந்தக் கடிதத் தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள் ளார்.
தங்களுக்கான கலாச்சாரங் களையும் அடையாளங்களையும் ஒருங்கிணைந்து காப்பாற்ற மக்க ளுக்கு உத்வேகம் அளிக்க, அவர் மேற்கொண்ட அடித்தளத்தை தொடர்ந்து நாமும் மேற்கொள் வோம். அத்துடன் உண்மையான முறையில் நாட்டை நிர்மாணிக் கவும் கலைஞர் வழியில் பாடுபடு வோம், எனவும் ராகுகாந்தி வலி யுறுத்தி உள்ளார். இன்றைய தினத்தில் நம்மீது திணிக்கப்படும் பின்னடைவுகளை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்; எதற்கும் தீரத்துடன் போராடும் உங்கள் தந்தையின் வலிமையை அதற்காக நாம் பெற வேண்டும். அத்துடன் வளர்ச்சிக்காக ஒரு மக்கள் இயக் கத்தை அவர் நிர்மாணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என வும் ராகுல்காந்தி தெரிவித்துள் ளார்.
இந்தப் பயணத்தில் அவரது மாண்பு நமக்கு வழிகாட்டியாக மேலும் தொடரட்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment