கோவிட் சிறப்பு விசாரணை குழு: கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் சிறப்பு ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

கோவிட் சிறப்பு விசாரணை குழு: கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் சிறப்பு ஏற்பாடு

சென்னை, ஆக. 3-   சென்னை காவல்துறையில், கோவிட் சிறப்பு விசாரணை குழு ஆலோசனைக் கூட்டம்  1.8.2021 அன்று கூடுதல் ஆணையர் கண்ணன் தலை மையில் நடைபெற்றது.

2ஆவது அலையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் 7 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டனர். இதை யடுத்து, சென்னையில் கரோ னாவை கட்டுப்படுத்தும் வகை யில் மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதைப்போன்று, சென்னையில் கரோனா 2ஆவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் 13 காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 காவலர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர் களின் பெயர், முகவரி, அலைபேசி எண்களை பெற்று பாதிக்கப் பட்டவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தொற்று எப்படி பரவியது, நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தீர்கள், சிகிச்சை எடுத்து வருகிறார்களா? உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது கரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று முழு விவரங்களை குறித் துக் கொள்வார்கள். அதன்பிறகு கரோனா பாதிக்கப்பட்ட நபரு டன் தொடர்பில் இருந்தவரின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு எப்படி கரோனா பரவியது, நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தீர்கள், ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய் தீர்களா? கரோனா பாதிப்பு உள்ளதா? சிகிச்சை பெற்றீர்களா? என்று விசாரித்து கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கடந்த 4 நாட் களாக கரோனா பாதிப்பு எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைப்போன்று சென்னை, கோவை, சேலம் உட்பட 23 மாவட்டங்களில் பாதிப்பு அதிக ரித்து வருவதால் சுகாதாரத்துறை, மாநகராட்சி சார்பில் மூன்றாவது அலை பரவாமல் தடுக்கும் வகை யில் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைப்போன்று சென்னை காவல்துறை சார்பில் கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் 13 காவல் எல் லைக்குட்பட்ட பகுதியில் 13 பேர் கொண்ட கோவிட் விசாரணைக் குழு மீண்டும் ஆரம்பிக்கப்பட் டது. இந்தக் குழுவில் பானுப்பிரியா, அன்புக்கரசி, சுப்பையா தாஸ், விக்னேஷ், ரேவதி, ஓவியா, ராதா, மகேஷ்வரி, சாராள், சித்ரா, கோமதி, சாந்தி, குண சுந்திரி ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். இதையடுத்து அந்த குழுவினருடனான ஆலோ சனைக் கூட்டம் 1.8.2021 அன்று நடைபெற்றது.

அப்போது கரோனாவை கட்டுப்படுத்த எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கடந்த முறை சிறப்பாக செயல்பட்டது போல் இந்த முறையும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங் கினார்.

No comments:

Post a Comment