உலக பொது மறையாம் திருக்குறளை தமிழர் குமுகாயத்தில் மேலும் விரிவாக பயன்பாட்டில் கொண்டு செல்லும் முயற்சியோடு திருக்குறள் வழியில் வாழ்வியல் சிந்தனைகளை முன்னெடுக்கும் பணியில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தமிழ் மொழிக்கும் திருக்குறளுக்கும் பெரியார் ஆற்றிய பணிகள் இங்கு நினைவு கூறப்படுகிறது. இப்போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்
1. 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.
2. 13 - 18 வயது
3.பொது பிரிவு அனைத்து பிரிவுகளுக்கும் முதல் இரண்டாவது மூன்றாவது பரிசுகளுடன் அய்ந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
முதல் பரிசு கலைஞரின் குறளோவியம்.
இரண்டாவது பரிசு: பேரா.நன்னனின் நல்ல உரைநடை எழுத வேண்டுமா?
மூன்றாவது பரிசு: புலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம் & திருக்குறள் தெளிவுரை
ஆறுதல் பரிசுகள்: 5. புலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம்.
கட்டுரைகளின் தலைப்புகள்:
1. திருக்குறளின் பெருமைகள் (100 - 150 சொற்கள்)
2. திருக்குறளில் செய்நன்றி அறிதல் கல்வி மெய் யுணர்தல் விளக்குக 100 - 150 சொற்கள்)
3. ஊழ் விளக்குக (100-200 சொற்கள்)
4. 1949இல் பெரியாரால் நடத்தப்பட குறள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்களை பட்டியலிடவும்.
5. தமிழ் மொழிக்கும் திருக்குறள் வளர்ச்சிக்கும் பெரியார் ஆற்றிய பணிகள். (100 - 200 சொற்கள்)
இப்போட்டியில் விரும்பி கலந்து கொள்ளும் அன்பர்கள் அடையாள அட்டை / பிறப்பு சான்றிதழ் நகலுடன் கட்டுரைகளை periyarreaders@gmail.comமின் அஞ்சல் முகவரிக்கு 05.09.2021 க்குள் அனுப்பவும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இந்த போட்டிகளுக்கான பரிசு நூல்களை தோட்ட நிர்வாகிகள் மன்ற (சபா) தலைவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு (மலேசியா) தலைவருமான மு.கோவிந்தசாமி அவர்கள் வழங்குவார்கள்.
தொடர்புக்கு:
புலவர் கு.க. இராமன் 012-9030413
அன்பு இதயன் : 01170317121,
மா.மருதமுத்து : 012-3721404
No comments:
Post a Comment