திருவள்ளூர்,ஆக.9- திருத்தணியில் பழங்குடியினர் சான்றுகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் ஓய்வூ தியத்துக்கான ஆணை களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று (8.8.2021) வழங்கி னார்.
திருவள்ளூர் மாவட் டம், திருத்தணி வட்டத் தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை சார்பில், பால்வளத் துறை அமைச் சர் சா.மு.நாசர் பழங்குடியினர் சான்றுகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் ஓய்வூ தியத்துக்கான ஆணை களை வழங்கினார்.
விழாவில், அமைச்சர் நாசர் பேசும்போது, ஆதி வாசிகள் தினத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட பாப்பிரெட்டி பள்ளி, காஞ்சிபாடி, ராஜ பத்மாபுரம், பெரிய கள காட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 104 பழங்குடியின மக்களுக்கு இனச் சான் றுகளும், வி.கே.என்.கண் டிகை, சூரிய நகரம் கிராமங்களை சேர்ந்த 20 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், தும்பி குளம் மற்றும் சகவராஜ பேட்டை கிராமங்களை சேர்ந்த 7 பழங்குடியின மக்களுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணைகளும் வழங்கப் பட்டுள்ளன.
இனச்சான்றுகள் அடிப்படையிலேயே பழங் குடியினர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சலுகைகளில் முன்னு ரிமை வழங்கப்பட்டு வருவதால் இதை முழு மையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் ச.சந் திரன், திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி .ராஜேந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சி யர் எம்.சத்யா, திருத்தணி வட்டாட்சியர் ஜெய ராணி மற்றும் அரசு அலு வலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment