உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம்

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதிபதி ஜோதிமணி பேச்சு

சென்னை, ஆக.3 உலகில் முதல் மனிதன் லெமூரியா கண்டத்தில்தான் தோன்றி னான் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன என உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி பேசினார்.

லெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மய்யம் சார்பில் பல்வேறு சமுதாய பிரமுகர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் சென்னை மயி லாப்பூரில்  1.8.2021  அன்று  நடைபெற்றது. ஆய்வு மய்யத்தின் தலைமை இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார். அதன் நிறுவனத் தலைவர் ரவீந்திரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி .ஜோதிமணி, அகில இந்திய தடகள வீரர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ரவீந்திரா எழுதியலெமூரியா காலம் முதல் தமிழர்களின் வரலாற்று உண் மைகள்' என்ற புத்தகத்தை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி வழங்க, டி.தங்கமுத்து, மல்லிகை நாகரெத்தினம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் நீதிபதி ஜோதிமணி பேசியதாவது:-

உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம். இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அதற்கு ஆணித் தரமான ஆதா ரங்களும் உள்ளன. இந்த லெமூரியா கண்டம்தான் முன்பு குமரிக் கண்டமாக இருந்தது. முதல் தமிழன் தோன்றிய இடம் இந்த குமரிக் கண்டம்.

உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இருக்கிறது. ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல சொற்கள் தமிழில் இருந்து தோன்றி உள்ளன.

இவற்றை ஆவணப்படுத்தவே இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி பேசினார்.

No comments:

Post a Comment