அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்
தாராபுரம், ஆக.10 - உலக பழங்குடியினர் நாளை யொட்டி " நாவா " என்ற அமைப்பின் சார்பில் பழங்குடியினருக்கான கட்டணமில்லா தொலை பேசி சேவையை, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் திருப்பூர் மாவட் டம்,தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயி லாக நேற்று (9.8.2021) துவக்கி வைத்தார்.
காணொலி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு வனத்துறை முதன்மை செயலர் சுப் ரியா சாகு, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் வி.சி.ராகுல், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷாவா ஆகியோர் பங் கேற்றனர்.
அந்த நிகழ்ச்சி குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்த தாவது: உலக பழங்குடிகள் நாளை முன்னிட்டு "நாவா" அமைப்பின் சார்பில் பழங் குடியின மக்களுக்கு கட் டணமில்லா தொலைபேசி சேவை (180042 -_ 51576) துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் தங்களுக்கான பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.பழங்குடி மக்களை காக்க அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டும் என் பதே இந்த நிகழ்சசியின் நோக்கம் ! இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடி மக்களுக்கு கட்டண மில்லா தொலைபேசி சேவையை ஏற்பாடு செய்த "நாவா" அமைப்பிற்கு தமிழ்நாடு அரசின் சார் பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
நிகழ்வில் பழங்குடி மக்கள் பிரதிநிதிகள், நாவா அமைப்பின் தலை வர் மருத்துவர்.ராஜலட் சுமி சுப்பிரமணியம், பார தியார் பல்கலை கழக பேராசிரியர் லவ்லீனா, சென்னை பல்கலைக் கழக போராசிரியர் முனைவர் தாமோதிரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர் கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment