எருமை வளர்ப்பினை ஊக்கப்படுத்துவோம் கோமாதா - குல மாதா என்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

எருமை வளர்ப்பினை ஊக்கப்படுத்துவோம் கோமாதா - குல மாதா என்பதா?

குயில் கூவும், மயில் தோகைவிரித்து ஆடும், கோழி முட்டையிடும், பசு பால் தரும் 1976-77, 78 அன்றைய கல்வி ஆண்டு களில் 3ஆம், 4ஆம் தொடக்கப்பள்ளி வகுப்புகளில் தமிழ்பாடநூல்களில் கருத்து விளக்கப் படங்களுடன் மேற்கண்ட வாச கங்கள் காணப்படும். கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம், காமதேனு என்பவையெல்லாம் அன்றைய பக்தி திரைப்படங்களில் (சரஸ்வதி சபதம்) அடை யாளக் குறியீடுகளாக காட்டப்படுகின்றன.

வளர்ந்து வரும் குழந்தைகளிடம் ஏன், சமூக அமைப்பிலேயே பசுமாடு தெய்வீகத் தன்மை கொண்டதாகவும் பயன்பாட்டுக்கு உரியதாகவும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.

கண்ணன் குழலுக்கு மயங்கி பசுமாடுகள் புல்மேய்வதையும் மறந்து நின்றதாக சொல்லப்படுகின்றது. கண்ணன் பொம்மை இருந்தால் பசுமாட்டு பொம்மையும் அவ னோடு இணைந்து இருக்கும்.

தனது புல்லாங்குழலால் புல்மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகளை மயங்க வைத்த கண்ணன் அருகில் இருந்த எருமை மாடுகளிடம் ஏன் கருணை காட்டவில்லை? அவை கன்று ஈனவில்லையா? பால் தரவில்லையா?

எருமைப் பாலில் கால்சியம், பாஸ் போரோஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டா சியம் அதிகம் காணப்படுகிறது. பீட்டா கரோட்டின் இந்த பாலில் இருப்பதால் பாலை பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும். எருமைப் பாலில் பசும்பாலைவிட கொழுப் புச் சத்து அதிகம். கிராமங்களில் அடித்தட்டு, நடுத்தர குடும்பங்கள் வளர்த்து வந்த கால்நடைகள் எருமை மாடுகளே. இன்று சூழ்நிலை சற்று மாறியுள்ளது.

Òஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண் டும்Ó

-              என்ற பாடலில்பசும்பால் என அழுவோர்க்கு கூழ் தருவோம்என்றும்

வந்தேண்டா பால்காரன்

பசும்மாட்ட கட்டி

பாடப் போறேன்

-              என்றும்

கோமாதா! ஊரக் காக்கின்ற

குலமாதா!”

-              என்றும்

கோமாதா எங்கள் குலமாதா

குலமாதர் நலங்காக்கும்

குலமாதா!”

-              என்றும் பாடல்கள் கவிஞர்களால் இயற்றப்பட்டுள்ளது.

கருப்பாக இருப்பதால் நிறவெறுப்பு எருமை மாடுகளிடம் உயர்ந்த மேட்டுக்குடி மக்களிடையே ஏற்பட்டுவிட்டது.

ஏலே, எருமை

எருமை மாடே... என்று

வலிமை படைத்தவன் வலிமையற்ற வனை திட்டினான். காராம் பசு மணப் பெண்ணுக்கு சீதனமாக அளிக்கப்பட்டது. புதுமனைபுகுவிழாவில் பசுமாடே முதல் நபராக வீட்டுக்குள் அழைக்கப்பட்டது. இன்றும் அழைக்கப்படுகிறது.

ஆட்டுப்பால் குடிச்சா

அறிவழிஞ்சு போகுமுன்னு

எருமைபால் குடிச்சா

ஏப்பம்வந்து சேருமுன்னு

காராம்பசு ஓட்டி

வாராண்டி தாய்மாமன்

-              என்றொருபாடல்

ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவனை கிராமங்களில் பெரியவர்கள் நீ எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்கு (தகுதி) என திட்டுகின்றனர். கிராமங்களின் அடிப்படை வாழ்வாதாரமே கால்நடைகள் வளர்ப்பு தான். குறிப்பாக பால் உற்பத்தி அதாவது எருமை மாடு வளர்ப்பு தென் மாவட்டங் களில் எருமைநாயக்கன்பட்டி, எருமைக் காரன்பட்டி என கிராமங்களின் பெயர் இருப்பதே எருமைமாட்டு வளர்ப்பை சுட்டிக் காட்டும். இந்திய அளவில் டில்லி எருமைக்கு தனிசிறப்பு உண்டு.

வடுகப்பட்டி அய்யாத்துரை

வாராண்டி கதவைத் திற

எருமை மாட்டுமேலே

ஏறிவாரான் மேற்கினிலே

தாளந்தட்டு மேளம்தட்டு

-              என்றும்

எருமக் கண்ணுக்குட்டி

என்னருமக் கண்ணுக்குட்டி

எருமக் கண்ணுக்குட்டி

என்னருமக் கண்ணுக்குட்டி

-              என்ற பாடலிலும் எருமை மாடு பற்றி சிறப்பாக பேசப்படுகிறது.

மிகப் பழங்காலத்தில் விவசாயப் பணிகளில் உழவு மற்றும் வைக்கோல் போரடித்தல் நிகழ்வுகளில் எருமைமாடு களே பெரும்அளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகளைமக்களை பெற்ற மகராசிபோன்ற கருப்பு - வெள்ளை படங்களில் காணலாம்.

சூத்திரர்களின் பிரதான கால்நடை விலங்கு எருமை மாடே. ஆகவே மாட்டு பொங்கல் விழாவில் எருமைமாட்டினை சிறப்பு செய்யுங்கள் என 2019 ஜனவரி பொங்கல் விழாவிற்கு நமது ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். கழகத்தோழர்கள் எரு மைமாடுகளை சிறப்புசெய்து அவற்றிற்கு பதாகைகள் வைத்தனர். பார்ப்பனர் களுக்கு அரசர்கள் பசுவைத்தானமாகக் கொடுத்து உள்ளனர்.

பசுபொம்மை சிலை அன்றிலிருந்து இன்றுவரை கோமாதாவாக வணங்கப்படு கிறது. வடமாநிலங்களில் மதவாதிகள் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு பசுமூத் திரத்தை குடிக்கின்றனர். சாணத்தை உட லெங்கும் பூசி குளிக்கின்றனர். கிராமங்களில் மாடு மேய்க்கின்றவனுக்கு மாட்டுக்காரன் என்ற சிறப்பான பெயரே உண்டு.

ஒளியும்குன்றும்என்ற தலைப்பில் புரட்சிகவிஞர் பாரதிதாசன்

அருவிகள் வயிரத்தொங்கல்!

அடர்கொடி பச்சைபட்டே!

குருவிகள், தங்ககட்டி!

குளிர்மலர், மணியின்குப்பை!

எருதின்மேல் பாயும்வேங்கை

நிலவுமேல் எழுந்தமின்னல்

சருகெலாம் ஒளிசேர்தங்கத்

தகடுகள் பாரடாநீ!”

-              என்ற கவிதையில்

வேங்கை எருதின்மேல் பாய்வதாக குறிப்பிடுகின்றார். எனவே, அடித்தட்டு மக்களின் வாழ்வாதார கால்நடைகளான எருமை வளர்ப்பினை ஊக்கப்படுத்து வோம்.

சு.ஆறுமுகம் ஆசிரியர்

பகுத்தறிவாளர் கழகம்

ஆசிரியர்அணிஅமைப்பாளர்

திருவாரூர்.

செல்: 82483 47702

No comments:

Post a Comment