கோயில்களில் தமிழில் அர்ச்சனை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

கோயில்களில் தமிழில் அர்ச்சனை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

சென்னை, ஆக.2 கோயில்களில் தமிழில் அர்ச் சனை செய்யும் அர்ச்சகர் களின் விவரங்கள் குறித்து விளம்பர பலகைகள் வைக்க உள்ளதாக அமைச்சர்  பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வே பகுதியில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, திமுக எம்.பி. தயா நிதிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங் கினர்.

இதன் பின்னர் செய் தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய் யப்பட உள்ளது. அதற் காக 47 கோவில்களை தேர்வு செய்து அன்னை தமிழில் அர்ச்சனை என விளம்பர பலகைகளும் வைக்க உள்ளோம். முதற் கட்டமாக வரும் வாரத் தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமி ழில் அர்ச்சனை தொடங் கப்பட உள்ளது.

அர்ச்சனை செய்ப வரின் பெயர், தொலை பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியில் தகவல் பலகையில் வைக் கப்படும். தமிழில் அர்ச் சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச் சனை செய்து வழிபாடு செய்யலாம். தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள் ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

No comments:

Post a Comment