இந்திய ஜனநாயகம் வெட்டிச் சாய்க்கப்படுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

இந்திய ஜனநாயகம் வெட்டிச் சாய்க்கப்படுகிறது

*  துஷ்யந்த் தவே

[இந்திய அரசுடனோ அல்லது தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்துடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டிருந்தால், அதனை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று NSO  அமைப்பைக் கேட்டுக் கொள்வதற்கும், இந்த விவகாரத்தில் உள்ள முழு உண்மை யையும் தோண்டி வெளியில் எடுப்பதற்கு இந்தியக் குடிமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்குமான   உரிமையும் இந்தியர்களுக்கு உள்ளது.]

பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பற்றி வெளிவந்த செய்திகள், இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்திய குடிமக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலை பிரதிபலிக்கிறது. தேர்ந்து எடுக்கப் பட்ட  இந்திய சமூக ஆர்வலர் குழு ஒன்றின் மீதும், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதரர்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுக் கேட்பது போன்ற ஒற்றறியும் செயல்களுக்கு இந்திய அரசு நேரடியாக பொறுப்பானதா? அல்லது அந்த ஒற்றறியும் செயல் ஒரு தனிப்பட்டவரின் தூண்டு தலால் மேற்கொள்ளப்பட்டதா? இச்செயலில் எந்த ஒரு பங்கும் இல்லை என்று இந்திய அரசு மறுத்துள்ள நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றினால் மட்டுமே இதில் உள்ள ரகசியத்தை வெளிக் கொண்டு வர இயலும்.

மனச்சாட்சியின்படி செயல்படுதல்

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அரசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான் பெகாசஸ் வேவு பார்க்கும் ஒரு மென்பொருள். இஸ்ரேலில் பொது மக்களுக்கு எதிரான சித்ர வதையைப் பற்றி ஆராய்வதற்கான பொதுக் குழுவுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில், உலுக்குவது,  ஷபாஷ் (Shabach) நிலையில் காத்துக் கொண்டிருப்பது  ,   தவளையைப் போல தாவுவதற்கு தயாராக ஆவது, அதிக இறுக்க மான கைவிலங்குகளைப் பூட்டுவது, விசாரணைக்கு உட்பட்டவருக்கு தூங்குவதற்கான வாய்ப்பு அளிக் காமல் இருப்பது ஆகியவை எல்லாம் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்று இஸ்ரேல் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் போது, உடல் அளவிலான வன்முறையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ள பொது பாதுகாப்பு சேவை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் சந்தேகத்திற்கு உள்ளானவர்களின் கவுரவத்திற்கும், சுதந்திரத்திற்கும் தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  "சட்டம் மற்றும் சமூகம் பற்றியும்  கொள்கை,  சட்டத்தின் ஆட்சி மற்றும் பாதுகாப்பு பற்றியதுமான அடிப்படை கேள்விகளையும், எழுப்பியுள்ளது" என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் சார்பாக பேசிய தலைமை நீதிபதி . பராக் (A. Barak) "இஸ்ரேல் நாடு தற்போது இருக்கும் கடினமான உண்மை நிலையைப் பற்றிய ஒரு விவரிப்புடன் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. . . . கடினமான அந்த உண்மை நிலையை இந்த முடிவு காரணமாக  இஸ்ரேலினால் எளிதாகக் கையாளச் செய்யும் என்று நாங்கள் அறிந்தே உள்ளோம். ஒரு ஜனநாயகத் திற்கு எதிர்காலத்தில் விதிக்கப் பட்டது இதுதான். தங்களது ஒரு கையை சில நேரங்களில் பின்புறம் கட்டிக் கொண்டு போரிடவேண்டிய கட்டாயம் ஜனநாயகத்திற்கு ஏற்படத்தான் செய்கிறது. அப்படி இருக்கும் போதும் கூட,  ஜனநாயகத் திற்குத் தான் மற்றவற்றை விட மேலானதொரு முக்கியத்துவம் கிடைக்கிறது. பாதுகாப்பைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கான கூறுகளாக  சட்டத் தின் ஆட்சியும், தனிப்பட்ட மனிதரின் சுதந்திரமும் அமைந்துள்ளளன" என்று கூறிய அவர், "நாம் தற்போது இருக்கும் தீவிரவாதத் தின் உண்மையான, கடுமையான உண்மை நிலையைப் பற்றி நாம் நன்கு அறிந்தே இருக்கிறோம்; சில நேரங்களில் அவற்றிலேயே அமிழ்ந்து போன வர்களாகவும் இருக்கின்றோம். தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் கையாள இயன்ற நமது ஆற் றலுக்கு தீங்கு  இழைப்பதற்கு இந்த முடிவுக்கு இருக்கக் கூடிய வாய்ப்பும் நம்மை கவலை கொள்ளச் செய்கிறது. எவ்வாறு இருந்தாலும் நாமெல்லாம் நீதிபதிகள். சட்டத்தைப் பற்றி முடிவு செய்வதில், தூய்மையான நமது மனச்சாட்சியின்படி கட்டாயமாக செயலாற்றவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்" என்று அந்தத் தீர்ப்பை முடித்து வைத்திருந்தார்.

என்.எஸ்.. .(NSO)    குழுமத்திற்கும் இந்திய அர சுக்கும் இந்த சொற்கள் நினைவுபடுத்திக் காட்டப்பட வேண்டும். தீவிரவாதத்துடன் போர் புரிகிறோம் என்ற பெயரில் ஜனநயாகத்தை சீரழித்துவிட இயலாது. நமது இந்திய அரசமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள, மிகவும் பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இலட்சியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்திய ஜனநாயகம். அது இந்தியக் குடி மக்களுக்கு சொந்தமானதே அன்றி, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல.  இலக்கான குழுவினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது என்பது, இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி பல சந்தேகங்களை எழுப்புகிறது. இதில் நம்மையெல்லாம் நடுங்கச் செய்வது என்னவென்றால், எதிர்கட்சியினரையும், மாற்றுக் கருத்துக்களையும் அடக்கி ஒடுக்கும் முயற்சியில் ஒன்றிய பா... அரசு வெற்றி பெற்றுவிட்டதென்றால், இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சந்தான். குடிமக்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய அரசமைப்பு சட்டப்படியான கடமை அரசுக்கு உள்ளது. இந்த பெகாசசின் ஒற்று பார்க்கும் செயல்பாட்டில் அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும்,  அதனைத் தடுப்பது என்ற தனது கடமையில் இருந்து அரசு பரிதாபமான முறையில் தவறிவிட்டது. சட்டத்தின் ஆட்சி சீரழிக்கப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மிகமிக மோசமான அரசாட்சியையே அது பிரதிபலிக்கிறது என்பதற்கும் தக்க சான்றுகள் உள்ளன.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், தனிமை மற்றும் ரகசியம் காப்பதற்கான சுதந்திரத்தையும்  மோசமான அளவில் மீறும் வகையில், குடிமக்களுக்கு எதிராக இத்தகைய ஒற்று வேலைகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன என்பதை இந்திய புலனாய்வுத் துறை (Intelligence hureau)  ஆராய்ச்சி மற்றும் பகுத்தாய்வுப் பிரிவு (Research and Analysis Wing), தேசிய பாதுகாப்புக் கவுன்லின் தலைமைச் செயலகம் (Secretariat  of Security Council)  ஆகிய அமைப்புகள் இந்திய அரசுக்கு முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அந்த அமைப் புகள் அமைதியாக இருந்தன என்பது இந்த ஒற்ற றியும் வேலைக்கு அவை உடந்தையாக இருந்தன என்பதையோ அல்லது அரசின் மோசமான ஆட்சித் திறனையோ காட்டுவனவாக உள்ளன. இத்தகைய தொரு சூழலில், நீதித்துறையின் மேற்பார்வையில்  மிகமிக உயர்ந்த அளவிலான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டியது என்பது அரசமைப்பு சட்டப்படியான தேவையாகும். அத்தகையதொரு விசாரணை மேற்கொள்ளப் படாமல் போயின், தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்வதற்கான தகுதியையே இந்தியா இழந்து விடுகிறது.

குடிமக்களின் தனிமையையும், ரகசியங்களையும்  பாதுகாக்கும் உரிமை அரசமைப்பு சட்டப்படியான ஒரு மதிப்பீடு என்று 2017 ஆம் ஆண்டில் கே.எஸ். புட்டாசாமிக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. குடிமக்களின் தனிமையையும், ரகசியங்களையும்  பாதுகாக்கும் உரிமை முழுமை யானது அல்ல என்பதால், அந்த உரிமை குறைக்கப் படுவது என்பது, நியாயமான, நேர்மையான, காரண காரியங்கள் கொண்ட, அரசமைப்பு சட்ட பாதுகாப்பு களுக்கு உட்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்பட இயலும்.

இந்தியா கையெழுத்திட்டுள்ள அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 12 ஆவது பிரிவில், "ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலோ, ரகசியத் திலோ, குடும்பத்திலோ, வீட்டிலோ அல்லது கடிதப் போக்கு வரத்துகளிலோ யதேச்சதிகாரமாக எவர் ஒருவரும் குறுக்கிடக்கூடாது; அத்தகைய குறுக் கீடுகள் அல்லது தாக்குதல்களுக்கு எதிராக சட்டப் படியான பாதுகாப்பு பெறும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா கையெழுத்திட்டுள்ள மற்றொரு ஆவண மான, பன்னாட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய பிரகடணத்தின்  17 ஆவது பிரிவு, "ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலோ, ரகசியத்திலோ, குடும் பத்திலோ, வீட்டிலோ அல்லது கடிதப் போக்கு வரத்துகளிலோ யதேச்சதிகாரமாக சட்டத்திற்குப் புறம்பாக எவர் ஒருவரும் குறுக்கிடவோ, தாக்குதல் மேற்கொள்ளவோ கூடாது; ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலோ, ரகசியத்திலோ, குடும்பத்திலோ, வீட்டிலோ அல்லது கடிதப் போக்கு வரத்துகளிலோ யதேச்சதிகாரமாக எவர் ஒருவரும் குறுக்கிடக்கூடாது. அத்தகைய குறுக்கீடுகளுக்கோ அல்லது தாக்குதல்களுக்கோ எதிராக சட்டத்தின் பாதுகாப்பு பெறும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது"  என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பன்னாட்டு சட்டங்களின் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள இந்தியா எந்த அளவுக்கு அவற்றைப் பின்பற்ற  கடமைப்பட்டுள்ளது என்ப தையும், அரசமைப்பு சட்டத்தின் 51 ஆவது பிரிவு தெரிவிக்கிறது என்பதை கே.எஸ்.புட்டாசாமி வழக் கில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டதுதான், இந்தியாவால் 1993 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட மனித உரிமை பாதுகாப்பு சட்டம்.

மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகள் அவை தூதரின் பரிந்துரைகள்

மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகள் அவை தூதரின் 2014 ஆம் ஆண்டு அறிக்கையில் டிஜிட்டல் தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பங்களைப் பற்றி அடிப்படையில் ஆராய்ந்து அதற்கேற்றவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.  மனித உரிமை பாதுகாவலர்களின் குரல்களை ஒலி பெருக்குவதன் மூலமும், மனித உரிமை மீறல்களை ஆவணப் படுத்துவதற்கு புதிய கருவிகளை அவர்களுக்கு அளிப்பதன் மூலமும், இத்தகைய ஆற்றல் மிகு தொழில்நுட்பங்கள், மனித உரிமைகளை மேம்படுத் தப்பட்டதொரு முறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளுக்கு உறுதியளிக்கிறது,  என்று அது கூறுகிறது. ஆனால், "ஒற்றறியும் பணியை மேற் கொள்ளவும், தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்கவும், புள்ளி விவரங்கள் திரட்டவும் ஆன அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனி மனிதர்களின் ஆற்றலை, தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களும் கூட மேம்படுத்துகின்றன. . ."  என்று அது கூறுகிறது.

முன்னதாக,  உறுப்பு நாடுகளின் கவலைகள் காரணமாக, 'ஆஃப் லைனில்' இருக்கும் மனித உரிமைகளை 'ஆன்லைனி'லும் கூட பாதுகாக்க வேண்டும் என்று 68/167 எண்ணிட்ட தீர்மானத்தை அய்க்கிய நாடுகள் அவையின் பொது சபை நிறைவேற்றியதுடன், டிஜிட்டல் தகவல்பரிமாற்றம் உள்ளிட்ட மக்களின் தனிமை மற்றும் ரகசியம் காப்ப தற்கான உரிமையை மதித்து பாதுகாக்கவேண்டும் என்று அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொண்டது.

அந்த அறிக்கை மேலும் கூறுவதாவது: சுதந்திரம், நடுநிலை தவறாமை, மற்றும் வெளிப்படைத் தன்மை தொடர்பான பன்னாட்டுத் தரங்களை கடைப் பிடிக்கும் நீதிமன்ற பங்களிப்பினால், பன்னாட்டு மனித உரிமை சட்டம் கேட்கும் குறைந்த அளவு தரங்களை கடைப்பிடிக்கும் ஒட்டு மொத்த சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஏற்படுத்தவும் உதவ இயலும். அதே நேரத்தில், குற்றங்குறைகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதில் நீதித்துறைக்கு இருக்கும் பங்களிப்பினை சகலரோக நிவாரணி என்பதாகப் பார்க்கக் கூடாது. கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்ப தற்காக சுதந்திரமானஒரு மேற்பார்வை அமைப்பை உருவாக்குவதற்கு அது பரிந்துரைத்திருந்தது. அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமை பிரகடனத்தைப் பின்பற்றத் தவறியதால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன் நிறைந்ததொரு நிவாரணம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அது உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டி ருந்தது. வியாபாரத்தின் பங்கைப் பற்றியும் அந்த அறிக்கை கையாண்டிருந்தது. தகவல் பரிமாற்றத் தொழில்நுட்ப நிறுவனம்,  பயன்பாட்டாளர் களுக்கான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டு மெனக் கேட்கும்போது, நியாயப்படியான, சட்டப் படியான காரணங்களுக்காக மட்டுமே அந்த புள்ளி விவரங்கள் விநியோகிக்கப்பட இயலும்.

2021 ஆம் ஆண்டுக்கான தனது வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்றுக் கொள்வது பற்றிய அறிக்கையில்,  ஆர்வம் உள்ள தனது பங்குதாரர் களுக்கு, எங்களது தயாரிப்புகளை பாதுகாப்புடனும், பயன் நிறைந்த முறையிலும், நியாயமானதொரு முறையிலும் பயன்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க தான் பாடுபடுவதாக"  NSO வியப்பளிக்கும் முறையில் தெரிவித் துள்ளது.

தனது வாடிக்கையாளர்களில் ஒருவர் கெட்ட நோக்கத்துடன் செயல்பட்டி ருந்தாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு வட்டத்துக்கு வெளியே இருக்கும் யாரோ ஒருவரின் மின்னணுவியல் கருவியின் மீது எங்களது கருவிகளில் ஒன்று பயன்படுத்தப்பட் டாலோ,  என்ன செய்ய இயலும் என்ப தற்கான வழிகளை அது விவரித்துள்ளது. "அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி தெரி வித்துள்ள பலவிதமான வழிமுறைகளில்,  தேவைக்கேற்றபடி அத்தகைய எங்களது வாடிக்கை யாளர் எங்களது செயலியை முழுமையாகப்  பயன்படுத்த இயலாமல் செய்வதும் அடங்கும்."

மேலும் அது கூறுகிறது: மின்னணுவியல் முறையில் ஒற்றறிவது பற்றி பன்னாட்டு அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிக்கல் நிறைந்ததொரு விவாதத்தில், இன்று வெளியிடப்பட்டிருக்கும் எங்களது அறிக்கை, புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு தேவை என்ற அளவிலேயே நாங்கள் பார்க்கிறோம்.  மேலும் ஆழமான பரிசீலனைக்கான எங்களது சொந்த நடைமுறைகளைத் தொடங்கு வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பன்னாட்டு அளவிலான விவாதத்தின் பயனாய் தங்களுக்கு ஏதேனும் தீங்கு நேரக்கூடும் என்ற அச்சத்தினால் இந்த அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டதா?

இந்திய அரசுடனோ அல்லது தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்துடனோ ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருந்தால், அதனை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று NSO  அமைப்பைக் கேட்டுக் கொள்ளவும், இந்த விவகாரத்தில் உள்ள முழு உண்மையையும் தோண்டி வெளியில் எடுப் பதற்கு இந்தியக் குடிமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்ப தற்கான   உரிமையும் இந்தியர்களுக்கு உள்ளது.

நன்றி: 'தி இந்து' 03-08-2021 

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment