சென்னை, ஆக. 13- பள்ளி கள் கரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலை யில், தற்போதைய நோய்த் தொற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று (12.8.2021) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, பள்ளிகள் எந்த அளவுக்கு தயார்நிலையில் இருக்க வேண்டும்? என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், முன் னேற்பாடுகள் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். ஏற்கெனவே உள்ள வழி காட்டு நெறிமுறைகளில் ஏதேனும் சேர்க்க வேண் டுமா என்று ஆலோசித்து, அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நீட் தேர்வுக் கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாணவர்க ளுக்கு நடத்தப்பட்டுதான் வருகின்றன. ஜே.இ.இ. போன்ற போட்டி தேர் வுகளுக்கும் பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது. அது ஒரு புறம் நடந்தாலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என் பதுதான் தமிழ்நாடு அர சின் நிலைப்பாடு. இவ் வாறு அவர் கூறினார்.
பாடங்கள் குறைக்கப்படுகிறதா?
சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள டி.பி.அய். வளாகத்தில் பள்ளிக் கல்வி சார்பில் ஆலோ சனை கூட்டம் நேற்று (12.8.2021) நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட் டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அதிகாரி கள் பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்தும், அவ்வாறு குறைத்தால் எந்த அள வுக்கு குறைக்க வேண்டும்? எந்தெந்த பாடங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்? என்பது குறித் தும் ஆலோசிக்கப்பட்ட தாக தகவல்கள் வெளி யாகி இருக்கிறது. இந்த ஆலோசனையின் அடிப் படையில் பாடங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
No comments:
Post a Comment