சென்னை, ஆக.3 ஏழை-எளியவர்களின் இதயங்களை வென்று, மக்களின் முதலமைச்சர்என்று அன்புடன் கலைஞர் அழைக்கப்பட்டார் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உருவப்பட திறப்பு விழா ஆகியவற்றுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் அனுமதியோடு முகக்கவசத்தை கழற்றிக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு, பன்வாரிலால் புரோகித் தான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றிவிட்டு உரையை தொடங்கினார்.
‘அனைவருக்கும் மாலை வணக்கம்‘ என்று தமிழில் முதலில் கூறி, பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில், இந்த சட்டமன்றத்தில் நிலையான தடம்பதித்துச் சென்ற அனைத்து ஆன்றோர் களையும், சான்றோர்களையும் உளப்பூர்வமாக வணங் குகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்மையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை இயற் றுவதற்கு அவர்களின் பேரார்வமும் தொலைநோக்குச் சிந்தனையுமே அடிப்படை காரணங்களாய் அமைந்தன. இந்த சட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை வளமான மாநிலமாக உருவாக்குவதற்கு வழிவகுத்தன.
பனகல்ராஜா
தமிழ்நாடு சட்டமன்றம் பனகல் ராஜா, சி.ராஜகோ பாலாச்சாரி, டி.பிரகாசம், கே.காமராஜ், எம்.பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை, கலைஞர் எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா மற்றும் பல பெருந்தலைவர்களைக் கண்டுள்ளது. இந்த சட்டமன்றத்தில் தங்கள் பணியின் மூலம் இந்தியாவில் வலுவான நாடாளுமன்ற பாரம்பரியத்தையும், மக்களாட்சியின் மாண்பினையும் நிலைநிறுத்துவதற்கு பங்காற்றிய தலை வர்கள் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டதற்கு தமிழ்நாடு உண்மையிலேயே பெருமை கொள்ளலாம்.
முத்தமிழ் அறிஞர்
கலைஞர் என்றும், முத்தமிழ் அறிஞர் என்றும் அழைக்கப்படும் கலைஞர் தன்னுடைய பேச்சுத்திறமையால் மக்களை ஈர்த்தார். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்ததும், தனது அரசியல் வாழ்க்கையில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவர் தனது இளம் பருவமான 14-ஆவது வயதிலேயே அரசியலில் நுழைந்து, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடினார். அவருடைய அரசியல் மதிநுட்பத்திற்காகவும், சீரிய சிந்தனைத் திறனுக்காகவும் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களாலும் அவர் போற்றப்படுகிறார்.
தமிழ் மொழியின் மீது...
நிர்வாக பொருண்மைகளில் அவர் காட்டிய சுறுசுறுப்பும், அவரது அற்புதமான விவாதங்களும் இந்த சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலைஞரின் புகழுக்கு ஆதாரமாகவும், அவரது பெருமைக்கு காரண மாகவும் திகழ்ந்தது தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையேயாகும். இது அவரது அரசியல் எதிரிகளையும் கூட வசப்படுத்தியது.
கலைஞரின் அரசியல் நாகரிகத்தை ஒரு சம்பவத்தால் நன்கு உணர்த்த முடியும். 1972-ஆம் ஆண்டில், ராஜாஜி உள்பட பல சுதந்திர போராட்ட வீரர்களின் சேவைகளுக் காகவும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும் விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜாஜியால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அப் போதைய முதலமைச்சரான கலைஞரிடம், அவர் சார்பாக அப்போதைய ஆளுநரிடமிருந்து விருதை பெற்று தன்னிடம் அனுப்புமாறு வேண்டினார்.
நேரில் சென்று விருது வழங்கினார்
2.10.1972 அன்று கலைஞர், ராஜாஜி சார்பில் விருதினைப்பெற்றுக்கொண்டு 3.10.1972 அன்று ராஜாஜியின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து விருதினை வழங்கினார். இதை ராஜாஜி பெரிதும் பாராட்டினார். மாநிலத்தின் முதலமைச்சர்நேரில் சென்று விருதை வழங்கும் முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கலைஞர் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக ஏழை-எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இதயங்களை வென்றார். அவர் ‘மக்களின் முதலமைச்சர்’ என அன்புடன் அழைக்கப்பட்டார். அவர் கொண்டு வந்த பல புதுமையான திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான அவரது எண்ணற்ற அர்ப்பணிப்பு சேவையினை பறைசாற்றுகிறது.
அருமையான சந்திப்பு
இரண்டு மாபெரும் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடிக்கும், கலைஞருக்கும் இடையே 6.11.2017-ஆம் நாளன்று நடைபெற்ற சந்திப்பை நான் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன். நான் பிரதமருடன் சென்று கலைஞரை சந்தித்தேன். இது அருமையான சந்திப்பாக அமைந்தது. புதிதாக அமைக்கப்பட்ட 16-ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம். மேலும் மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாக இருக்கலாம். இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஒரு பொதுவான குறிக்கோ ளுடன் இணைந்து பாடுபடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment