சட்ட மன்ற உறுப்பினருடன் கழகப்பொறுப்பாளர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

சட்ட மன்ற உறுப்பினருடன் கழகப்பொறுப்பாளர்கள் சந்திப்பு

சீர்காழி, ஆக. 2- சீர்காழி  வட் டம் கடவாசலில் மயிலா டுதுறை மாவட்ட கழகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை முறையாக திறந்திட முந்தைய அரசு தடைசெய்து அர சாணை பிறப்பித்துள்ளதை நீக்கம் செய்து அரசு அனுமதிபெற்றுத் தரக்கோரி  முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு எழுதிய மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சீர்காழி, வைத்தீசுவரன் கோயில் ஆகிய இடங் களில் தந்தை பெரியார் சிலைக்கு காவல்துறை யால் அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை நீக்க நடவ டிக்கை எடுக்கக்கோரியும்  சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம், அவர்களிடம் மாவட்ட தலைவர் கட வாசல் குணசேகரன் அவர் களால் மனுக்கள் அளிக் கப்பட்டனசீர்காழி ஒன் றியத் தலைவர் சந்திரன், நகரத்தலைவர் சபாபதி, மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், பாண்டுரங்கன், ஆச்சாள் புரம் பாண்டியன், கட வாசல் திமுக உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment