நாக்பூர், ஆக.9 நாக்பூரில் தெருக்கள், கிராமங்கள் ஆகியவற்றில் உள்ள ஜாதி பெயர்களை மாற்ற வேண்டும் என மண்டல ஆணையர் பிரஜக்தா வர்மா உத்தரவிட்டுள்ளார்.
நாக்பூர் மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் சாலைகள், தெருக்கள் மற்றும் கிராமங்களில் பெயர்களில் உள்ள ஜாதி குறியீடுகளை வருகிற 15ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு முன் மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மண்டல ஆணையர் பிரஜக்தா வர்மா உத்தரவிட்டு உள்ளார். நாக்பூர், சந்திராப்பூர், கட்சிரோலி, வார்தா, கோண்டியா மற்றும் பண்டாரா ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆணையர் பிரஜக்தா வர்மா இந்த உத்தரவை பிறப்பித்தார். அதேபோல் ஜாதி குறிப்புகளை அகற்றுவதற்கான பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்களை உடனுக்குடன் சமர்ப் பிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர். நாக்பூர் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment