தெக்ரான், ஆக. 31- உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 9-ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,516 பேர் கரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49,26,964 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 581 பேர் பலியா னதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 06 ஆயிரத்து 482 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 41 லட்சத்து 46 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கரோனா பாதிப்புடன் 6,73,740 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் 17 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!
கோலாலம்பூர், ஆக. 31- மலேசியாவில் அதிகரித்து வரும் கரோனா பரவலால் அங்கு பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,579 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,06,089 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவில் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,845 பேர் குணமடைந்த நிலை யில், இதுவரை 14 லட்சத்து 22 ஆயிரத்து 5 பேர் குண மடைந்துள்ளனர். தற்போது கரோனா பாதிப்புடன் 2,67,997 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment