இந்த நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு (தி.மு.க.) அரசு கொண்டாடும் இந்த காலகட்டத்தில், இது நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரகடனப் படுத்தியுள்ள நிலையில், நாம் ஒரு முக்கியமான கோரிக்கையை - வேண்டுகோளாக வைக்க உரிமையுடன் விரும்புகிறோம்.
நீதிக்கட்சி ஆட்சி திராவிடர் ஆட்சியின் முக்கிய தலைவர்களில் தியாகராயருக்கு சென்னை மாநகராட்சி வளாகத்தில் மட்டுமே சிலை உள்ளது. தியாகராயர் நகரில் தனியாக முக்கிய இடத்திலும்,
திருவல்லிக்கேணியில் டாக்டர் சி.நடேசனார் (‘திராவிடர் இல்லம்' நடத்தியது அங்கே) சிலையும், டாக்டர் டி.எம்.நாயர் சிலை சேத்துப்பட்டு பகுதியிலும், பனகல் அரசர் நகரின் முக்கிய இடத்திலும், முத்தையா முதலியார் சிலை மயிலாப்பூரிலும் சிறப்பாக அமைத் தால், இந்த நூற்றாண்டின் திராவிடர் ஆட்சியின் மணிமகுடத்தில் மேலும் முத்துகளை இணைத்ததாகும்.
எதிர்கால வரலாற்றில் இது முக்கியம்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலையும் தமிழ் நாட்டின் தலைநகரத்தில் அமைத்தல், சிறப்புக்குரியதே! தமிழ்நாட்டினை பெரிதும் நேசித்தவர் - ‘அடுத்து தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும்' என்று கூறி, தமிழில் கையெழுத்திட்டவர் அவர்!
No comments:
Post a Comment