பெரியார் உலகம் - களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர், வாரீர்! என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெரியார் உலகம் - ஒரு திராவிட அறிவியல் உலகம்.
தலைமுறைகளைத் தாண்டி, தத்துவங்களால் தலைநிமிர்ந்த மானுடத்தின் சுயமரியாதை எழுச்சியை அனைத்து மக்களுக்கும் அறிவு விளக்கமாக விளக்கும் அரிய அருங்காட்சியகக் கருவூலம்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை - வயது இடைவெளி சிறிதுமின்றி, சில மணி நேரத்தில் பல நூற்றாண்டுச் சாதனைகளை கற்பிக்கும் கல்விக் கூடமான கலைக்கூடம்!
பெரியார் ஒலிக்காட்சியகங்கள் - குழந்தைகள் பூங்கா - நூலகம் - காலக்குறியீட்டில் புதுமை வரலாறு பெ.மு. - பெ.பி. உள்பட!
உலக மக்களை ஈர்க்கும் வண்ணம் புதுமை பூத்துக் குலுங்கும் புத்தாக்கங்கள்!
நம் ‘அறிவின் தேக்கமாம்' அய்யாவின் அருந்தொண்டால் எப்படி புழுவினும் கேடாய் மிதிக்கப்பட்டவர்களின் எழுச்சிக்குப் பிறகு, எப்படி மதிக்கப்படுகிறார்கள் - ஆயுதம் ஏந்தா அமைதிப் புரட்சிமூலம் என்ற வரலாற்றுச் சுவடுகளைக் காட்டி, காணும் மக்களுக்குக் கல்லூரி எனக் கற்றுக் கொடுக்கும் காலம் தந்த அறிவுக்கொடை!
பணிகள் தொடங்கிவிட்டன -
பங்களிப்புகள் பொங்கி வர வேண்டாமா?
பெரியார் சகாப்தத்தின் பெருமிதப் பூரிப்பில் உள்ள என்னருந் தோழர்களே,
கடமை மறவா கருஞ்சட்டை உறவுகளே,
களப் பணியாளர்களாக மாறிடுவோம்!
கச்சிதமாக முடித்து - வாகை சூடுவோம், வாரீர்! வாரீர்!!
உங்களது முதல் களப்பணியாளன்,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
31.8.2021
No comments:
Post a Comment