நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால் மக்களை சந்திக்கிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால் மக்களை சந்திக்கிறோம்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணியில் ராகுல்

புதுடில்லி, ஆக.13   மக்களை பாதிக்கிற பிரச்சினைகள் குறித்து எந்த விவாதத்தையும் அனு மதிக்காத ஒன்றிய பாஜக அரசு, நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரை அவசர அவசர மாக முன்கூட்டியே முடித்த தற்கு  எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் நேற்று (12.8.2021) பேரணி நடத்தினர். பேரணிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி எம்.பி., தலைமை வகித்தார். 

பின்னர் ராகுல்காந்தி  கூறுகையில்,

எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக் கப்படாததால் நாங்கள் இன்று உங்களுடன்  (ஊடகங்கள்) பேச இங்கு  வெளியே வர வேண்டியிருந்தது. பெகாசஸ் பிரச்சினையை எழுப்பி விவாதிக்க கோரினோம். ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை.விவசாயிகள் பிரச்சினை பற்றியும் பேச நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை.நாடா ளுமன்றத்தில் எங்களை பேச அனுமதிக்காததால் மக்களை சந்திக்கிறோம்.இந்தியாவின் 60 சதவீத மக்களின் குரல்களை ஒன்றிய அரசு நசுக்கியுள்ளது. அவமானப் படுத்தியுள்ளது. நாடாளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சிகளை பேச விடாதது ஜனநாயக படு கொலைஎன்று கண்டித்தார்.

No comments:

Post a Comment