இரண்டாம் சுதந்திரப் போராட்டம் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் தேவை

புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி ஆக 10 புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயண சாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலை யில் உள்ளதாகக் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட் சியைக் குற்றம்சாட்டி வரு கிறது.  குறிப்பாகக் குடியு ரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு எனப் பல குறைகளைக் கூறி வருகிறது.  ஆனால் பாஜக தரப்பில் இதற்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகிறது.  பெகாசஸ் ஒட்டுக் கேட்பு பிரச்சினை யால் நாடாளுமன்ற கூட் டத் தொடர் நடப்ப தில்லை

இந்நிலையில் புதுவை மேனாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலை வருமான நாராயணசாமி செய்தியாளர்களிடம், ”காந்தியார் வாங்கிக் கொடுத்த சுதந்திரம், மோடி ஆட்சியில் பறி போய் கொண்டுள்ளது. நாட்டில் தனிமனித சுதந் திரம் மற்றும் பாதுகாப்பு இல்லை என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். விலை வாசிகள் உயர்ந்துள்ளது. பணி இல்லா திண்டாட் டம் அதிகரித்துள்ளது.

எனவே மோடி அரசை தூக்கி எறிந்தால் தான் மக்கள் உண்மை யான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும்.  நாம் இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காங்கிரஸ், கட்சியினர் சோனியா, ராகுல் தலைமையில் இன் னொரு சுதந்திரப் போராட் டத்திற்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த சுதந்திர போர், 2024இல். நாட்டின் பிரதம ராக ராகுலைக் கொண்டு வந்து, ஜனநாயகத்தை மீட்போம்.  மக்களுக்கு மோடியின் அடிமை ஆட்சியில் இருந்து விடுதலை கொடுப்போம்.

இப்போது புதுச் சேரியில் ஆட்சி நடை பெறுகிறதா என்பதே தெரியவில்லை. கடந் தாண்டு நாங்கள் 125 கோடி ரூபாய் அதிகமாக நிதி பெற்றோம். இன்று 24 கோடி ரூபாய்தான் வாங்கியுள்ளனர். எனவே இது தோல்வி அடைந்த ஆட்சி எனக் கூற வேண் டும்'' எனத் தெரிவித்துள் ளார்.

No comments:

Post a Comment