வாசிங்டன், ஆக. 11- அமெரிக் காவில் டெல்டா வகை கரோனா வைரஸ் சிறு வர்களிடம் அதிவேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருக்கிறது.
அமெரிக்க அதி பராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்கள் மூலம் கரோனா பரவலை கட் டுக்குள் கொண்டு வந் தார். இதனால் பல்வேறு மாநி லங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டிருந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் கரோனா பரவல் தீவிரம் எடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் தற் போது கரோனா 4ஆம் அலையில் சிறார்கள் மற் றும் வளர் இளம் பருவத் தினர் இடையே தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தொற்று நோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் தெரிவிப்பதாவது, ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் கரோனா தொற்று மீண் டும் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். குறிப்பாக சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பாதிப் புக்கு உள்ளாகி இருக்கின் றனர். டெல்டா வகை கிருமியால் அமெரிக்கா வில் தற்போது 4வது அலை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. டெல்டா வகை வைரஸ் அதிதீவிரமாக பரவும் தன்மையுடையது.
தற்போது பாதிப்புக் குள்ளாகி இருக்கும் சிறார் களின் 90 விழுக்காடு இந்த வைரசால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு வரும் தகவல் களும் அதனை உறுதி செய்கின்றன. எனவே பெரியவர்கள் மட்டுமல்ல சிரார்களிடமும் டெல்டா வகை வைரஸ் தொற்று அதிகம் காணப்படுகிறது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment