ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு மாகாணத் தலைநகரை தலீபான்கள் கைப்பற்றினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு மாகாணத் தலைநகரை தலீபான்கள் கைப்பற்றினர்

காபூல், ஆக. 9- ஆப்கானிஸ் தானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான உள்நாட்டு போர் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வருகிறது. தலீபான்களுக்கு எதிரான இந்த போரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப் கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அங்கு நிலைமை மோச மாகி வருகிறது.

ஏற்கெனவே ஆப்கா னிஸ்தானின் சரிபாதி பகுதிகள் தலீபான்களின் வசம் உள்ள நிலையில், ஒட்டுமொத்த ஆப்கா னிஸ்தானையும் கைப்பற் றும் நோக்கில் தலீபான் கள் தாக்குதல்களை தீவி ரப்படுத்தியுள்ளனர். பன்னாட்டு படைகளின் வெளியேற்றம் காரண மாக சற்று பலவீனம் அடைந்துள்ள ஆப்கா னிஸ்தான் ராணுவம் தலீபான்களின் மூர்க்கத் தனமான தாக்குதல்க ளுக்கு ஈடு கொடுக்க முடி யாமல் திணறி வருகிறது. இதனால் அரசு படைகள் வசம் உள்ள முக்கிய நகரங்களை தலீபான்கள் விரைவாக கைப்பற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், 24 மணி நேரங்களுக்கு இரண்டு மாகாண தலை நகரங்களை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த நாட்டின் புகழ் பெற்ற அரசு ஆதரவு ஆயுதக் குழுத் தலைவர் அப்துல் ரஷீத் தோஸ் துமின் ஆதிக்கம் நிறைந்த ஜாவஸ்ஜன் மாகாணத் தலைநகர் ஷேபர்கான் தலிபான்கள் வசம் வந்தது.  கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் கைப்பற்றியுள்ள இரண் டாவது ஆப்கன் நகரம் இதுவாகும். முன்னதாக, நிம்ரோஸ் மாகாணத் தலை நகர் ஸராஞ் தலி பான்க ளின் கட்டுப்பாட் டுக்குள் வந்தது.

No comments:

Post a Comment