உடுமலை, ஆக.1 அரசு அய்.டி.அய்.,யில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. மாத உதவித்தொகையும், மடிக்கணினி, பேருந்து பயண அட்டை உள் ளிட்ட பல் வேறு சலுகை கள் வழங்கப் படுகிறது.
உடுமலை அரசு அய்.டி. அய்.,யில், எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார், வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட தொழில்பிரிவுகள் கற்பிக் கப்படுகிறது.நடப் பாண்டு மாணவர் சேர்க்கைக்காக வட்டார வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படு கின்றன.
மேலும் கிராமப்புற மாணவர்களிடையே தொழிற்படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.
அவ்வகையில் குடிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அரசு அய்.டி. அய்., அலுவலர்கள் பேசிய தாவது:-
இரண்டு மற்றும் ஓராண்டு தொழிற்படிப்பு கள் முடிக்கும் மாணவர் களுக்கு கட்டாயமாக வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. அரசு அய்.டி. அய்.,யில் சேரும் மாணவர் களுக்கு பயிற்சிக்கட்டணம் கிடையாது.
மாத உதவித்தொகை யும், மடிக்கணினி, பேருந்து இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு சலு கைகள் வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களில் தொழிற்படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை இணையதளத்திலும் நேரடியாகவும் விண்ணப் பிக்கலாம் என்றனர். மாண வர் சேர்க்கைக்கான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment