மும்பை, ஆக. 13- விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர் களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விரு துக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப் பட்டு இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சிறப்பாக செயல்பட்டது.
இதைதொடர்ந்து ஒன்றிய அரசு இந்த விருதுக்கு ராஜீவ் காந்தியின் பெயரை மாற்றிவிட்டு முன்னாள் ஆக்கி வீரர் மேஜர் தியான் சந்த்தின் பெயரை சூட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதை அரசியல் விளையாட்டு என விமர்சித்தது.
இந்த நிலையில் மராட்டிய அரசு தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குபவர்களை பாராட்ட வழங்கப்படும் விருதுக்கு ராஜீவ் காந்தியின் பெயரை சூட்ட முடிவு செய்துள் ளது. அதன்படி 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செய்த பங்களிப்பை நினைவூட்டுகிற வகையில் இந்த விருது வழங்கப்படும் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதிக்குள் இந்த விருதை பெறுபவர்கள் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய தகவல் மற்றும் தொழில்நுட்ப கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்யும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல்
முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு
புதுடில்லி, ஆக. 13- இந்தியாவில் இந்த ஆண்டு முதல் முதன் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் இதுவரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வீடு வீடாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வந்து குடும்பத்தினரிடம் தகவல்களை கேட்டு பதிவு செய்வதாகும். இந்தப் பணியில் ஏறத்தாழ 31 லட்சம் பேர் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் முதல் முறையாக நமது நாட்டில் மக் கள்தொகைகணக்கெடுப்பும் இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில், இணையம் வழியாக எடுக்கப்படுகிறது. இதை நாடாளுமன்ற மக் களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். இதில் பொதுமக்கள் தாமாகவே சுயகணக்கெடுப்பு செய்வதற்கான ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனி செயலி, தளம் இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை பதிவு செய்வதற்கு ஒரு கைப்பேசி செயலியும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு சிறப்பு தளமும் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது: கரோனா வைரஸ் பெருந்தொற்றால், 2021 மக்கள் தொகைகணக்கெடுப்பும், அது தொடர்பான நடவடிக்கைகளும் களத்திற்கு சென்று எடுப்பது அடுத்த உத்தரவு வரும் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான முதல் அறிவிக்கை, அரசிதழில் (கெஜட்) வெளியிடப்பட்டு விட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்கீழ் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகள் பகிரங்கப்படுத்தப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் பால் விலை குறைப்பால் 3 மாதங்களில் விற்பனை அதிகரிப்பு: அமைச்சர் நாசர்
சென்னை, ஆக.13 சென்னை தலைமை செயலகத்தில் செய்தி யாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அளித்த பேட்டி வருமாறு:-
ஆவின் பொருட்கள் பன்னாட்டு அளவில் 8 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு ஆவின் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 23 பால்வள கூட்டுறவு சங்கங்களில் 22 சங்கங்களில் பல்வேறு தரப்பில் முறைகேடு நடந்துள்ளது. முதற்கட்டமாக 8 சங்கங்களின் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டதால் மூன்று மாதங் களில் 1.65 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment