கழகத் துணைத் தலைவர் பங்கேற்று உரை!
உரத்தநாடு,ஆக.13- உரத்த நாடு ஒன்றியம் புலவன் காட்டில் பேராசிரியர் நல். இராமச் சந்திரன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி நூலக ஆண்டு விழா 10.8.2021 அன்று இரவு ஏழு மணிக்கு நடை பெற்றது .
மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்தார் .ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மா.நல். பரமசிவம் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார். திராவிடர் கழக இலட்சியக் கொடியினை அறக்கட்டளை உறுப் பினர் நெடுவை கு. அய்யா துரை ஏற்றினார்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் நல். இராமச் சந்திரன் படத்தைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரை யாற்றினார்.
எளிய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து தமிழர் தலைவர் அவர்களின் அன்பை பெற்று இளவதிலேயே துணை வேந்தராக பொறுப்பேற்று கல்வி தொண்டாற்றிய பேரா.நல்.இராமச்சந்திரன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் ஒரத்த நாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராம கிருட்டிணன், ஒன்றிய செய லாளர் ஆ.இலக்குமணன், ஒன்றிய பெருந்தலைவர் (தி.மு.க) பார்வதி சிவசங்கர், படிப்பக செயலாளர் வி.எம்.கிருட்டினன், ஆகியோர் உரையாற் றினர்.
மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி, ஊராட்சிமன்றத் தலைவர் மா.நல்.மெய்க்கப்பன், ஒன்றியக்குழு திமுக உறுப்பினர் செயராமன், மாவட்ட விவசாய அணி தலைவர் பூவை. இராம சாமி, மாவட்ட கலைத்துறை தலைவர் சடையார் கோயில் வெ. நாராயண சாமி, பெரியார் பெருந்தொண்டர் இராசப்பா, திருவோணம் ஒன்றிய கழக தலைவர் சாமி. அரசிளங்கோ, ஒன்றிய விவசாய அணித்தலைவர் மா.மதிய ழகன், தெற்கு பகுதி செயலாளர் சுடர் வேந்தன், வடக்கு பகுதி செயலாளர் ராஜ கோபால், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பாலகிருட்டிணன், ஆ. இராசா காந்தி, நெடுவாக் கோட்டை கு. நேரு, கு.லெனின், ஒன்றிய துணைத் தலைவர் மண்டலக் கோட்டை இரா.சுப்பிர மணியன், சங்கர், உரத்த நாடு நகரத் தலைவர் பேபி.ரெ.இரவிச் சந்திரன், செயலாளர் ரெ.இரஞ்சித் குமார், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில் குமார், செயலாளர் பேபி.ரெ.இரமேசு, தலைமைக் கழக பொறுப்பாளர் க. கலைமணி, படிப்பக பொருளாளர் அன்பு மணி காங்கிரசு பொறுப்பாளர் சைவராசு, மற்றும் படிப்பக புரவலர்கள், உறுப்பினர்கள் பங் கேற்று சிறப்பித்தனர். ஒன்றியக் கழக துணைச் செயலாளர் நா.பிரபு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment