புதுடில்லி, ஆக. 10- கோவிஷீல்டு, கோவாக்சின் கரோனா தடுப்பூசிகளை அடுத்தடுத்து செலுத்திக் கொள்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில், உ.பி.யின் சித்தார்த் நகரைச் சேர்ந்த 18 பேருக்கு தவறுதலாக முதல் தவணை கோவிஷீல்டும், 2ஆவது தவணை கோவாக்சினும் செலுத்தப்பட்டது. எனினும் அவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஒரே நிறுவனத்தின் தடுப்பூசியை, இரு தவணைகளாக செலுத்திக் கொண்டவர்களைவிட இந்த 18 பேருக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, இரு தடுப்பூசிகளையும் தலா ஒரு டோஸ் வீதம் செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (டிசிஜிஅய்) நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது.
No comments:
Post a Comment