காரைக்குடி, ஆக. 9- 07.08.2021 சனி மாலை திருப்பத்தூர் வருகை தந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களிடம் கரோனா பேரிடர் முதலமைச்சர் நிவாரண நிதி
ரூ. 1,25,000 க்கான வரைவோலையை, முத்தமிழறிஞர் கலைஞரின் மூன் றாவது நினைவு நாளில் காரைக்குடி பணி நிறைவு பெற்ற ஆசிரியர்
ச.அரங்கசாமி (மாவட்ட தி.க தலைவர்) ம.கு.வைகறை (மாவட்ட தி.க.செயலாளர்) பணி நிறைவு விஞ்ஞானி சு.முழுமதி, ப.சுந்தரம், மற்றும் திராவிடர் கழக நண்பர்கள், பணி நிறைவு பெற்ற விஞ்ஞானிகள், அலுவலர்கள், அஞ்சல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியா ளர்கள், ஆசிரியப் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சார்பாக வழங் கினர்.
நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்கு மாவட்ட கழ கத்தின் சார்பாக நூல்களும், பய னாடையும் அளித்து சிறப்பிக்கப் பட்டது.
இந்த நிகழ்வில் திமுக மாநில இலக்கிய அணி தலைவர் மு.தென் னவன், காரைக்குடி நகர திமுக செயலாளர் நா. குணசேகரன் ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment