சென்னை, ஆக.1 இணை யம் மூலம் தேர்வு நடத்து வதற்காக அரசு கலை கல்லூரிகளின் கணினி ஆய்வகங்கள் குறித்த விவ ரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த தேர்வை நடத்துவது தொடர்பாக அங்கிருக் கும் உள்கட்டமைப்பு வச திகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விவரம் கேட்டு இருக்கிறது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூர்ண சந்திரன் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் கல் லூரி முதலமைச்சர்கள், செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத் தில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் வருகிற செப்டம் பர்-நவம்பர் மாதங்களில் என்.எஸ்.இ.அய்.டி. மூலம் இணைய வழி தேர்வு நடத்த திட்ட மிட்டு இருக்கிறது. தேர்வு நடத்தும் இடங்களாக கணினி ஆய்வகங்களை கொண்ட கல்லூரிகள், பிற பெரிய கல்வி நிறுவ னங்களை தேர்வு செய்தி ருக்கின்றன. இதுதொடர் பாக என்.எஸ்.இ.அய்.டி. நிறுவனத்தின் தொழில் நுட்ப மற்றும் செயல் பாட்டு ஊழியர்களுடன் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முதலமைச்சர்கள் தொடர்புகொண்டு, இணையவழி தேர்வு களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள், திட்ட மிடுதலுக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்‘ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் வருகிற செப்டம்பர்-நவம்பர் மாத இடைவெளியில் சில தேர் வுகளை நடத்த இருப் பது தெரியவந்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment