உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
புதுடில்லி, ஆக. 9 தேசிய சட்ட சேவைகள் ஆணை யம் சார்பில் டில்லியில் நேற்று (8.8.2021) நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசிய தாவது:
காவல் நிலையத்தில் மனித உரிமைக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ரீதியான சித்ர வதைகள் அதிகமாக உள் ளது. காவல் நிலையங் களில் சித்ரவதை மற்றும் காவல்துறையினரின் கொடுமைகள் இன்னும் நம் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளாக உள் ளன. இவை அதிகரித்து வருவது கவலையளிக் கிறது. மனித உரிமைகள் தொடர்பாக அரசியல் சட்டத்தில் பிரகடனங்கள் மற்றும் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், காவல் நிலையங்களில் உறுதியான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாதது கைது செய்யப்பட்ட அல் லது விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட் டுள்ள நபருக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் நிலைமை உள்ளது.
காவல்துறையின் அத் துமீறலை கட்டுப்படுத்த, சட்ட உதவிக்கான அரச மைப்பு உரிமை மற்றும் இலவச சட்ட உதவி சேவைகள் கிடைப்பது பற்றிய தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத் துவது அவசியம். ஒவ் வொரு காவல் நிலையம் அல்லது சிறைச் சாலையில் இலவச சட்ட உதவி சேவைகள் தொடர் பான அறிவிப்பு பலகை கள் நிறுவப்பட வேண் டும்.
இவ்வாறு நீதிபதி ரமணா பேசினார். நிகழ்ச் சியில் சட்ட உதவி கோரும் விண்ணப்பத்தை நாட்டின் எந்தப் பகுதி யில் இருந்தும் சமர்ப் பிக்கும் சட்ட உதவி சேவைகள் செயலியையும் அவர் வெளியிட்டார்.
No comments:
Post a Comment