புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?

மக்களவையில் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி

புதுடில்லி, ஆக.1 உடல் நலத்தினை பாதிக்கும், புகையிலை பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, ஒன் றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், புகையிலை பழக்கத்தால் எந்த அளவிற்கு குடும் பப் பொருளதாரம் பாதிக்கப் படுகிறது? என்றும் இவற்றைத் தடுக்க புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பிற்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் மக்களவையில் அரக்கோணம் நாடாளுமன்ற தி.மு..  உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் 30.7.2021 அன்று எழுத்து மூலம் கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் பதில் அளித்தபோது குறிப் பிட்டதாவது,

புகையிலை பொருட்களின் தாக்கத்தால் கொள்ளை நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகரிக்கிறது என்றும், புற்றுநோய், இதய சம்மந்தப்பட்ட நோய்கள், நுரையீரல் நோய்கள் போன்ற நோய்களின் தாக்கம், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவோரிடம் அதிகரிக் கிறது என்றும், 40 சதவீதத்திற்கும் அதிகமான எலும்புருக்கி நோய், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவோரிடம் பரவியுள்ளது என்றும், இவற்றை தடுக்க 2003 ஆண்டு முதல் தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வி வளாகங்களுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைப் பிடித்தல் தடையும், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தில் கீழ், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பப் படுகின்றன.

புகையிலை பயன்பாட்டிலிருந்து மீட்டெடுக்க தேவையான உதவி திட்டங்களும் சுகாதார அமைச்சகத்தால் நிறைவேற்றப்படுகின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டத்தின்படி தேவை யான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. புகையிலைப் பொருட்களால், 2017-2018 ஆண்டில் மட்டும் 1.8 இலட்சம் கோடிகள் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

 

பொதுமக்கள், வியாபாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால்  கரோனா தொற்று பரவலைக் குறைக்க முடியும்

மாநகராட்சி ஆணையர்

சென்னை, ஆக.1 இந்த ஒரு வாரத்தில் சென்னை மக்கள், வியாபாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:-

சென்னையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகிறது. இன்று (1.8.2021) முதல் முக்கிய இடங்களில் காவல்துறையினருடன்  இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்

பார்கள்.

கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்கின்ற கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக அனைத்து கடைகள் முன் பகுதியில் சானிடைசர் வைக்கவேண்டும்.

ஒரே நேரத்தில் பொதுமக்களை அதிகளவு அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரவேண்டும். தேவை இல்லாமல் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த ஒரு வாரத்தில் சென்னை மக்கள், வியாபாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

பொதுமக்கள் தெருக்களில், கடை வீதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த மண்டல அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment