வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

 சென்னை, ஆக. 11- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்த ரசன்விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

திராவிட முன்னேற் றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ் நாடு அரசின் நிதி நிர் வாகம் மற்றும் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக் கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையை வெளி யிட்டு பேசிய நிதியமைச் சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காய்தல், உவத்தலின்றி விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பாஜக ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறித்து வருகிறது. அதனை எதிர்த்து குரல் கொடுக் கும் வலிமையற்ற அரசாக அஇஅதிமுக செயல்பட் டது என்று குற்றச்சாட் டுக்கான ஆதாரங்களை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. முந்தைய ஆட்சியில், குறிப்பாக செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிகாரத்தில் இருந் தவர்கள் சுயநல ஆதா யம் தேடுவதில் குறியாக இருந் தார்கள் என்பதை வெள்ளை அறிக்கை உறுதி செய்துள் ளது. மாண்பமை சட்ட மன்றத்தில் ஒப்புதல் பெறா மல் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது கடுமையான அத்துமீற லாகும். உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத் தில் நடத்தாமல் நிதியி ழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை கடன் திருப்பிச் செலுத்தும் சக்தியற்றவைகளாக பலவீனப்படுத்தியுள்ளது. அரசியல் உறுதியும், நிர் வாகத் திறனும் இல்லாத அஇஅதிமுக ஆட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு களே இந்த நெருக்கடிக்கு காரணமாகும் என நிதி யமைச்சர் குற்றம் சுமத்தி யுள்ளார். கடுமையான நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக் குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என உறுதியளித்த நிதியமைச் சர் அதற்கான திட்டங் களை அடுத்து வரும் 2021 - 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முன்வைப்போம் என்று கூறியிருக்கிறார். அரசு நிர்வாகத்தை வெளிப் படைத் தன்மையோடும், மக்கள் ஆதரவோடும் நடத்தும் நல்ல நோக்கத் தோடு வெள்ளையறிக்கை வெளியிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட் சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இவ்வாறு இரா.முத் தரசன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment