சென்னை, ஆக. 2- தமிழ்நாட் டில் பி.எஸ்.என்.எல்., ஒயர் லைன் வாடிக்கையாளர்க ளின் எண்ணிக்கை மே மாதத்தில், 1.77 லட்சமாக உயர்ந்துள்ளது என, அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு சேவையில் வாடிக்கையா ளர்கள் தொடர்பான விவரங்களை, இந்திய தொலைத்தொடர்பு ஆணையம், மாதந்தோ றும் வெளியிட்டு வருகி றது. தற்போது, மே மாத வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங் களை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல்., ஒயர் லைன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது.இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதா வது: தமிழ்நாட்டில் பி. எஸ்.என்.எல்., அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 1.7 கோடி யாக இருந்தது. இது மே மாதத்தில், 1.6 லட்சமாக குறைந்துள்ளது.
இது தவிர தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் அனைத்திலும் சேர்த்து, 5.71 லட்சம் அலைபேசி வாடிக்கையா ளர்கள் குறைந்துள்ளனர். பி.எஸ்.என்.எல்., ஒயர் லைன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை, ஏப் ரல் மாதத்தை விட மே மாதத்தில், 1.77 லட்சமாக உயர்ந்துள்ளது.இதர தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து, 1.87 லட்சம் ஒயர்லைன் வாடிக் கையாளர்கள் அதிகரித்து உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment