நடிகைமீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை,ஆக.9- மீரா மிதுன் என்பவர் ஜாதி ஆணவத்துடன் பேசும் காட்சிப்பதிவு சமூக ஊட கங்களில் பரவி வந் துள்ளது. இப்பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் சமூக ஊடகங்களில் கடு மையான கண்டனங்கள் எழுந்துள்ளன. விடு தலைச் சிறுத்தைகள் கட் சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணை யர் அலுவலகத்தில் கடந்த 7.8.2021 அன்று புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், ‘மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக திட்டி காட்சிப் பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத் தையே மிகக் கேவலமாக வும், மோசமான வார்த் தைகளாலும் திட்டியது மட்டும் அல்லாமல் திரைப்படத் துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி காட்சிப்பதிவை பதிவிட்டுள்ளார். அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப் பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத் தினர். முதல் கட்டமாக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் (ஷிசி/ஷிஜி றிக்ஷீமீஸ்மீஸீtவீஷீஸீ கிநீt) உட்பட 7 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment