கோபி, ஆக. 10- கோபி மாவட்ட புஞ்சை புளியம்பட்டி ஒன்றியத்தில் நொச்சிக் குட்டை கிராமத்தில் 8.8.2021 அன்று காலை 11.00 மணிக்கு திராவிட மாண வர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
கோபி மாவட்டம் புஞ்சைபுளியம் பட்டி உள்ள நொச்சிக்குட்டையில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. 8.8.2021 காலை 11 மணிக்கு கோபி மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் உள்ள நொச்சிக்குட்டையில் மாணவர் அசித் குமார் இல்லத்தில் திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வர வேற்று நொச்சிக்குட்டை மாணவர் பிரபு மகிழ்ந்தார். மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் மாணவர்கள் மத்தியில் திராவிடர் கழகம், அதனால் பெற்ற உரிமைகள், அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் தொண்டறப்பணிகள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றி வரும் பணிகள்குறித்தும், திராவிட மாணவர் கழகத்தில் ஏன் இணைய வேண்டும் என்பதுகுறித்தும் மிக விரி வாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் பெரியாரியல் பயிற்சியில் இரண்டாம் பரிசுபெற்ற இரவிவர்மா, மூன்றாம் பரிசு பெற்ற சி.மதிவதனி உள்ளிட்ட. ஏழு மாணவர்களுக்கு புத்தகங்கள் அளித் தும், பயனாடை அணிவித்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோபிமாவட்டம், புளியம்பட்டி ஒன்றியம், கோபிச்செட்டிப் பாளையம் ஒன்றியத்திற்கு மாணவர்கழக அமைப்பும், கலைக்கல்லூரி, சட்டக் கல்லூரிகளுக்கும் மாணவர் கழக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஊர் நுழைவாயிலில் திராவிடமாணவர் கழகம் நொச்சிக்குட்டை என்ற பெயர்ப் பலகை எழுச்சி முழக்கத்துடன் திறந்து வைக்கப்பட்டது. அனைத்து மாண வர்களையும் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த கோபி மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் பா.வெற்றி மற்றும் ஈரோடு மண்டல மாணவர் கழக செயலாளர் சட்டக்கல்லூரிமாணவர் த.சிவபாரதி ஆகியோருக்கும், பெரும் உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நொச்சிக்குட்டை மாணவர்கள் அசித் குமார், ஆ.பிரபு ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்பகுதி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாகவிளங்கும் வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன், மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், கழகப்பேச்சாளர் கோபி.வெ.குமாரராசா, புளியம்பட்டி திமுக மணிவாசபெருமான் ஆகியோர் மாணவர்களை வரவேற்று, வாழ்த்தி னார்கள். நொச்சிக்குட்டை மாணவர் அசித்குமார் நன்றி கூறினார்.
புதிய பொறுப்பாளர்கள்
கோபி மாவட்ட புதிய பொறுப் பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர்: ப.கணபதி, மாவட்ட துணை தலைவர்:சி. தமிழரசி, மாவட்ட செயலாளர்: த.எழிலரசு, மாவட்ட துணை செயலாளர்: த. அன் பரசி, மாவட்ட அமைப்பாளர்: அ.அசித்குமார், கோபி ஒன்றியத் தலைவர்: த.மவுலிதரன், புளியம்பட்டி ஒன்றிய தலைவர்: ஆ.பிரபு,புளியம்பட்டி ஒன்றிய செயலாளர் :ப. ரவிவர்மா, புளியம்பட்டி ஒன்றிய அமைப்பாளர்:பொ.கர்ணன், காமதேனு கலை அறிவியல் கல்லூரி அமைப்பாளர் சி. மதிவதனி, கோபி அரசு கலை அறிவியல் கல்லூரி அமைப்பாளர்: ப.முனியாண்டி, கோவை சட்டக்கல்லூரி அமைப்பாளர்:மு.சந்தீஸ், நாமக்கல் சட் டக் கல்லூரி அமைப்பாளர் ப.சரண்யா.
No comments:
Post a Comment