தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பு பெரியம்மை நோய் போல டெல்டா வைரஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பு பெரியம்மை நோய் போல டெல்டா வைரஸ்

எளிதாக பரவும்: அமெரிக்கா அறிக்கை

வாசிங்டன், ஆக. 1- பெரி யம்மை போல டெல்டா வைரஸ் எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும்; தடுப்பூசிபோட்டுக் கொண்டால் பாதுகாப்பு என்று அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. என்னும் நோய்க் கட்டுப்பாடு மற் றும் தடுப்பு மய்யங்களின் அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு:-

* டெல்டா வைரஸ் பெரியம்மை நோய் போல எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும். மேலும், தடுப்பூசி போடா தவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்க ளும் டெல்டா வைரசை பரப்புவார்கள்.இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, காய்ச்சல், பருவ காய்ச்சல், சிற்றம்மை நோய் போல வேகமாக பரவுகிற வைரஸ் ஆகும். இது பெரியம்மை போல தொற்றும்.

* அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண் டவர்கள் பாதுகாப்பான வர்கள். தடுப்பூசிகள் நோய்த் தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப் பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத் தான் கொண்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக் கையில் சொல்லப்பட்டு உள்ளது.

இதுபற்றி சி.டி.சி.யின். இயக்குநர் டாக்டர் ரோச் செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண் டவர்கள், தொற்று பாதிப் புக்குள்ளாகிறபோது, தடுப்பூசி போடாமல் தொற்று பாதிப்புக்குள் ளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல் வார்கள்என தெரிவித் தார்.

டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை சி.என்.என்.தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சிற்றம்மை, பெரியம்மை நோய்கள் போல மிகவும் பரவுகிற வைரஸ் டெல்டா வைரஸ். பள்ளிக்கூடங்களில், மாணவர்கள், ஊழியர் கள், வருகிறவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசத்தை எல்லா நேரமும் அணிந்திருக்க வேண்டும்என்று வலி யுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment