கும்பமேளா போலி கரோனா பரிசோதனை வழக்கு: இயக்குநர்கள் வீடுகளில் சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

கும்பமேளா போலி கரோனா பரிசோதனை வழக்கு: இயக்குநர்கள் வீடுகளில் சோதனை

புதுடில்லி, ஆக.9  கும்ப மேளாவில் பங்கேற்றவர் களுக்கு கரோனா பரி சோதனை செய்ததாகக் கூறி 1 லட்சம் போலி பரிசோ தனை முடிவுகள் அளிக்கப் பட்ட வழக்கில் தொடர் புடைய தனியார் ஆய்வ கங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர்  7.8.2021 அன்று சோதனை நடத்தினர்.

உத்தராகண்ட் மாநி லம் அரித்துவாரில் கடந்த ஏப்ரல் 1 முதல்30 வரை கும்பமேளா நடை பெற்றது. அப்போது கரோனா 2-ஆவது அலை பரவி வந்ததால், கும்ப மேளாவில் பங்கேற்பவர்களுக்கு கரோனா வைர சுக்கான ரேபிட் ஆன்டி ஜென் மற்றும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய தனி யார் ஆய்வகங்களுக்கு உத் தராகண்ட் அரசு ஒப்பந்தம் வழங் கியது.

ஆனால் இந்த ஆய்வ கங்கள் கரோனா பரிசோ தனை செய்யாமலேயே, கரோனா தொற்று இல்லை என 1 லட்சம் போலியான முடிவுகளை வழங்கியது பின்னர் தெரியவந்தது. இத னால் அரித்துவாரில் கரோனா பாசிட்டிவ் விகிதம் அப்போது 0.18 சதவீதமாக இருந்தது. ஆனால் இது உண்மை யில் 5.3 சதவீதம் என தெரிய வந்துள்ளது.

ஒப்பந்தத் தொகை யின் ஒருபகுதியாக உத்த ராகண்ட் அரசிடம் இருந்து ரூ.3.4 கோடியை தனியார் ஆய்வகங்கள் பெற்றுள்ள நிலையில், அவை பரிசோ தனைக்கான போலி ரசீ துகள் தயாரித்ததும் தவ றான பதிவுகள் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அம லாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், நோவஸ் பாத் லேப்ஸ், டிஎன்ஏ லேப்ஸ், மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், டாக்டர் லால் சந்தானி லேப்ஸ், நல்வா லேபரட்டரீஸ் ஆகிய தனி யார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர் களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் 7.8.2021 அன்று சோதனை நடத்தினர். டேராடூன், ஹரித்துவார், டில்லி, நொய்டா மற்றும் ஹிசாரில் இந்த சோதனை நடைபெற்றது.

இதில் முறைகேடு தொடர்பான ஆவ ணங்கள்,  போலி ரசீதுகள், மடிக் கணினி அலைபேசிகள் சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.30.9 லட்சம் கைப் பற்றப்பட்டதாக அமலாக் கத் துறை தெரிவித்தது.

No comments:

Post a Comment