பெர்லின், ஆக. 11- ‘புவி வெப்பமயதால் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடப்பதால், பருநிலை மாற்றத்தில் பூமி முக்கிய கட்டத்தை எட்டி யுள்ளது. இதனால், பனிமலை உருகுதல், காட்டுத்தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழும் என்று மனித இனத்துக்கு அய்.நா. சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் பருவநிலை மாற் றத்துக்கு மனித இனமே காரணம்’ என்று அய்நாவின் காலநிலை அறிவியல் குழு அறிக்கையில் எச்சரிக் கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவில் சமீபத்தில் 1000 ஆண் டுகளில் இல்லாத மழை கொட்டித் தீர்த்து கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா, துருக்கியில் கடுமையான காட்டுத்தீ பரவுகிறது. வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதற்கு உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல்மட்டம் உயர்ந்ததுமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவை எதிர் காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை, அய்நா கால நிலை அறிவியல் குழு வெளியிட்டு உள்ளது. அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மய்யத் தின் 234 விஞ்ஞானிகள் புவி வெப்ப மயமாதல் குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.
இது தொடர்பான 3,000 பக்கம் கொண்ட அறிக்கையில் அதன் துணை ஆசிரியரும் மூத்த விஞ்ஞானியுமான லிண்டா மியர்ன்ஸ் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு பாரீசில் நடந்த பருவ நிலை மாற்றத்துக்கான உச்சி மாநாட்டில், கார்பன் வெளியேற் றத்தை குறைப்பதன் மூலம் புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல் சியசாக (2.7 டிகிரி பாரன்ஹீட்) குறைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில், பூமி எதிர்பார்த் ததை விட மிக வேகமாக வெப்பமய மாதலுக்கு உட்பட்டுள்ளது. இத னால், பூமி தற்போது 1.1 டிகிரி செல்சியஸ் (2 டிகிரி பாரன்ஹீட்) வெப்பமயதாலை எட்டியுள்ளது.
இதனால், வரும் 2030ஆம் ஆண்டுக்குள், முன்பு கணிக்கப் பட்டதை விட, ஒவ்வொரு கால கட்டத்திலும் பூமியானது 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அடை யும். தொழிற்சாலைகள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட் டால், பாரீஸ் பருவநிலை ஒப்பந் தத்தை கடுமையாக பின்பற்றா விட்டால், பூமி இன்னும் அதிக வேகமாக வெப்பமயமாகி 2 டிகிரி செல்சியஸ் நிலையை எட்டக் கூடும். இது கடும் வறட்சி, தொடர் கனமழை, வெள்ளம், புயல், சூறா வளி, காட்டுத்தீ, பனிமலை உருகு தல், வெப்ப காற்று வீசுதல் உள் ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர் களுக்கு வழி வகுக்கும். சமீபத்திய பருவநிலை மாற்றங்கள் இதனை நன்கு உணர்த்துகின்றன. இந்த மாற்றங்கள் புவி வெப்பமயமாதல் அதிகரித்தால் அடிக்கடி நிகழவும் வாய்ப்புள்ளது.
எடுத்துக்காட்டாக, 50 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் வெப்பக் காற்று வீசுதல் தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ் கிறது. புவி வெப்பமயமாதல் இன் னும் ஒரு டிகிரி செல்சியஸ் கூடி னால், வெப்ப காற்று வீசுவது 7 ஆண்டுகளுக்கு 2 முறையாக மோசமடைய கூடும். இதனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கிரீஸ், துருக்கி நாடுகளில் ஏற் பட்டது போன்று காட்டுத்தீ சம் பவங்கள் கூட ஏற்படும். இதன் மூலம் மனித இனத்துக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து தப்பித்து எங்கும் ஓடி, ஒளிய முடியாது. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது மட்டுமே கண் முன் உள்ள நிரந்தர தீர்வாக உள்ளது. கார்பன் டை ஆக்சைடினால் மாசடைவதை மிகப் பெரிய அளவில் வேகமாக குறைத்தல், கடுமையாக மாசடை வதை குறைத்தல், மிதமான கார் பன் வெளியேற்றம், மாசடைவதை குறைக்க சிறிய அளவிலான தற் போதைய திட்டங்களை தொட ருதல், கார்பன் மாசுபாட்டின் தொடர்ச்சியான அதிகரிப்பு ஆகியவற்றை பொறுத்தே எதிர் காலம் அமையும்.
அந்த அறிக்கையில் மேலும், `அண்டார்டிக் உள்ளிட்ட பகுதி களில் பனிமலை அவ்வபோது உருகி வருவதால், கடந்த 50 ஆண் டுகளில் மட்டும் கடல் நீர்மட்டம் 15 முதல் 30 செ.மீ. (6 முதல் 12 இன்ச்) வரை உயர்ந்துள்ளது. உல களவில் ஏற்படும் இந்த பருவநிலை மாற்றங்களுக்கு கார்பன், மீத்தேன் வாயுக்கள் அதிகளவில் வெளியேறி புவி வெப்பமயமாகிறது. சூரியன் உள்பட பிற கோள்களினால் பத்தில் ஒன்று அல்லது 2 சதவீதம் மட்டுமே புவி வெப்பமாகிறது,’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment