இந்தியப் பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

இந்தியப் பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிப்பு

லண்டன், ஆக. 10- இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதி கரித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ரெட் லிஸ்ட்டில் வைத்திருந்த பிரிட்டன் அரசு அதை 8.8.2021 அன்று முதல் நீக்கி யுள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி அதற் குரிய சான்று வைத்திருந்தால், 10 நாட்கள் விடுதியில் தனிமைப்படுத் திக் கொள்ளத் தேவையில்லை. மாறாக, தாங்கள் தங்க இருக்கும் வீடுகளில் 10 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து பயணிகள் வரு வதற்கும், விமானம் இயக்குவதற்கும் பிரிட்டன் அரசு தடை விதித்தது.

இரு நாடு அரசுகளுக்கும் இடையிலான கட்டுப்படுத்தப் பட்ட விமானச் சேவை மட்டும் இருந்துவந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதையடுத்து, இந்தியாவை ரெட் லிஸ்ட் பட்டியலில் இருந்து பிரிட்டன் அரசு நீக்கியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் அரசின் சுகாதாரத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் ரெஸ் லிஸ்ட் பட்டிய லில் இருந்து 8ஆம் தேதி அதிகாலை முதல் நீக்கப்படுகிறார்கள். இதன் படி இந்தியாவில் இருந்து பிரிட் டன் வரும் பயணிகள் இரு டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தி இருந் தால் அவர்கள் 10 நாட்கள் விடு திக்கு தனிமைக்குச் செல்லத் தேவை யில்லை.

மாறாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், தாங்கள் தங்க இருக்கும் இடத்தில் 10 நாட்கள் தனிமைக்குச் செல்லலாம். அங்கு 2ஆவது நாளிலும், 8ஆவது நாளுக் குப் பின்பும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.

அதேசமயம், பிரிட்டனில் தடுப் பூசி செலுத்தியவர்கள், அய்ரோப் பாவைச் சேர்ந்தவர்கள், அமெரிக் காவைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி பிரிட்டனுக்கு வந்தால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத் திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உலக அளவில் அங்கீகரிக்கப் பட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கு நாங்கள் அங்கீகாரம் அளித்துள் ளோம். பிரிட்டன் அங் கீகரிக்காத தடுப்பூசிகளைச் செலுத் தியவர் களை அனுமதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்.

பிரிட்டனுக்கு வரும் பயணிகள் புறப்படுவதற்கு முன் கண்டிப்பாக கரோனா பரிசோதனை எடுத்துநெகட்டிவ்' சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது புக் இன் அட் வான்ஸ் செய்தால் இரு நாட்களுக்கு முன் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

பிரிட்டனில் இரு தடுப்பூசியைச் செலுத்தியவர்கள், வெளிநாடுக ளில் பிரிட்டனால் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்கள், 18 வயதுக்குக் கீழ் பட்டவர்கள், பிரிட்டனில் வசிப் பவர்கள், பிரிட்டனால் அங்கீகரிக் கப்பட்ட தடுப்பூசியை வெளிநாடு களில் செலுத்தி பிரிட்டன் வருப வர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும்''. இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment