சென்னை, ஆக.10- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை புள்ளி விவரத்தோடு, ஆதாரப்பூர்வமாக தமிழ்நாடு மக்கள் எளிமையாக புரிந்து கொள்கிற வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு அதிமுகவினர், தங்களது ஆட்சியின் சாதனைகள் என்று கூற முடியாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்கள் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. கடந்த கால ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை அழைத்துச் செல்கிற மகத்தான பொறுப்பு தமிழ்நாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த பெரும் பொறுப்பை மிகச் சிறப்பாக செய்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்கிற பணியை மிகச் சிறப்பாக முதலமைச்சர் செய்வார் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment