பெங்களூரு, ஆக.13 கருநாடக மாநில புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை 28-ஆம் தேதி பதவியேற்றார். எனினும் ஒருவாரத்திற்குப் பிறகே (ஆகஸ்ட் 4) அவரால் அமைச்சர வையை விரிவாக்கம் செய்ய முடிந் தது. 29 பேர் புதியஅமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஆனால், அப்போது அமைச்சர் பதவிகிடைக்காத பலர் அதிருப்தி அடைந்தனர்.
எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதலமைச்சராக இருந்த லட்சுமண்சவதி, அமைச்சர்களாகப் பணியாற் றிய ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ் குமார், அரவிந்த் லிம்பாவளி, யோகேஷ்வர், ஆர். சங்கர், சிறீமந்த் பாட்டீல், எடியூரப்பா மகன் விஜ யேந்திரா ஆகியோர்மட்டுமன்றி, ராஜூ கவுடா, நேரு ஹோலேகர், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் அதிருப்தி பட்டியலில் இடம் பெற் றிருந்தனர். இவர்களின் ஆதரவா ளர்கள், பசவராஜ் பொம்மைக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங் களிலும் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக சமாதானமாகினர்.
இதனிடையே, புதிய அமைச்சர் களுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,இதிலும் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள துறைகள் திருப்தி அளிக்கவில்லை என்று ஆனந்த் சிங், பி.சிறீராமுலு, எம்டிபி நாகராஜ், சுனில்குமார் உள்ளிட் டோர் வெளிப்படையாக குரல் எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, ஆனந்த் சிங், தீவிர அரசியலில் இருந்து விலகு வதுடன்,தனது அமைச்சர் பதவி மட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பதவி விலகல் கடிதம் கொடுப்பதற்காக அவைத் தலைவர் விஷ்வேஷ்வர எக்டே காகேரியிடம் ஆனந்த் சிங் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் எம்டிபி நாகராஜூம் இதேபோல போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இந்த சம்பவங்கள், முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. மூத்தத் தலைவர் கள் மூலம், அதிருப்தி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சமா தானம் செய்யும் முயற்சியில் பொம்மை இறங்கியுள்ளார். சில ருடன் அவரே நேரடியாக தொலை பேசியில் தொடர்பு கொண்டும் பேசி வருகிறார்.
No comments:
Post a Comment