ஈரோடு, ஆக. 10- ஈரோடு மாவட்ட திராவிடர் கழக செயல்வீரர்கள் கலந் துறவாடல் கூட்டம் 8.8.2021 அன்று மாலை 5 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்ட தலைவர் கு.சிற் றரசு தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர்கள்
கோ.பாலகிருஷ்ணன் மற்றும்
இரா.நற்குணன், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் பண்ணையின் திராவிட நாற்று ஒரிச்சேரி தேவேந்திரன் கட வுள் மறுப்பு கூறி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து தோழர்கள் கருத்து தெரிவித் தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு.த.சண்முகம் மற்றும் பேரா சிரியர் ப.காளிமுத்து ஆகியோர் தங்களது சிறப்புரையில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் அன்று பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், பிறந்த நாள் ஊர்வலம் மற்றும் மாநகர் முழுவதும் கொடியேற் றுவது, பிறந்த நாள் சுவரொட்டிகள் ஒட்டுவது, தலைமைக் கழகம் வெளி யிடும் அறிவிப்பு படி பிறந்த நாளை கொண்டாடுவது,பெருந்தொற்று உள்ள நிலையில் தனிமனித இடை வெளி முகக் கவசம் மற்றும் அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக் கையை முழுமையாக கட்டாயம் கடைப்பிடித்து பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் சுவரெழுத்து பிரச் சாரப் பணியை சிறப்பாக செய்து வரும் பெரியார் வாசகர் வட்ட தலை வர் பி.என்.எம்.பெரியசாமிக்கு பேரா சிரியர் ப.காளிமுத்து கழகத்தின் சார் பில் பொன்னாடை அணிவித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் பேரவை நிறுவனத் தலை வர் மாசிலாமணி அம்மையார், திரா விடர் பேரவை பாபு, சுயமரியாதை திருமண மய்ய மாவட்ட அமைப் பாளர் ப.சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1. இரங்கல் தீர்மானம்.
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி ஆ.மாரப்பனார் அவர் களது மறைவிற்கு ஆழ்ந்த இரங் கலையும் வீரவணக்கத்தையும் இக் கூட்டம் தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 2
தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் விழாவை 17.09.2021 அன்று சிறப்பாக கொண் டாடுவது என முடிவெடுக்கப்படுகிறது.
தீர்மானம் 3
அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு இக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் பங் கேற்க முடியாத சூழ்நிலையை தொலைப்பேசி வாயிலாக கூறி கூட் டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெருந்துறை ஒன்றிய விஜயமங்கலம் தோழர்கள் மற்றும் பூதப்பாடியை சார்ந்த பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகள் தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக கூறினர்.
மண்டல இளைஞரணி செய லாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை யின் நன்றியுடன் கூட்டம் நிறை வுற்றது.
No comments:
Post a Comment