தஞ்சை, ஆக. 10 - பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகியவற்றின் பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 6.8.2021 அன்று மாலை 7 மணியளவில் காணொலி வழியாக நடைபெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்
மா. அழகிரிசாமி தலைமை ஏற்று உரையாற்றி னார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு முன்னிலையேற்று உரை யாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் இணைப்புரை வழங்கினார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.கும ரேசன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, தஞ்சையில் தொடங்கப்பட்ட பெரியாரியல் பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டுமென கூறினார். அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 19 மய்யங்களாக பிரித்து உடனடியாக தொடங்கி ஒரு மாதம் முழுவதும் மிகப்பெரிய அளவில் இருபால் இளைஞர்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் 1500க்கும் மேற் பட்ட இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற் றனர். அவர்களில் 1005 பேர் இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள். குற்றாலம் ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் நடைபெறும் பெரியாரி யல் பயிற்சி வகுப்பிற்கு இயக்கத்திற்கு அப் பாற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற வருவது குறைவு. மேலும் ஒரு நாள் முழுவதும் காலை யிலிருந்து மாலை வரை இடைவிடாமல் வகுப்புகள் நடைபெறும். அதில் கருத்துகளை சரியாக உள்வாங்க முடியாத சூழ்நிலை கூட இருக்கும். ஆனால் காணொலி வழியாக நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் புதிய மாணவர்கள் பங்குபெற்று, ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு வகுப்புகளை கேட்டு பயனடைந்தனர்.
அந்த மாணவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாடும் பொழுது அவர்கள் ஆற்றிய உரைகள் மிகப்பெரிய எழுச்சியாக இருந்தது. திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடைபெற்ற அந்த பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு விழா வருகிற 10ஆம் தேதி வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைத்து இந்தப் பயிற்சி வகுப்பினை இந்த மாதத்திற்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் கூறினார்கள். அந்த அடிப்படையில் முதலாவதாக பொறுப் பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மகளிர் அணியினருக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெற்றது.
அதேபோல் இந்த பயிற்சி வகுப்பிற்கும் நான்கு பகுதிகளாகப் பிரித்து அதில் வரக் கூடிய மண்டலங்களில் உள்ள மாநில, பொறுப்பாளர்களை தலைமை ஒருங்கிணைப் பாளர்களாக நியமித்தும், துணை தலைவர் களை பிரிவு ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்து அவர்கள் மூலமாக பயிற்சியில் பங்கேற்று உள்ளவர்களை தொடர்பு கொள் வதற்கும் அவர்களை நெறிப்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.
நான்கு பிரிவுகளில் 4 ஸூம் செயலி இயக்குநர்களை நியமித்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 30.8.2021 தேதி தேர்வும், அன்று மாலையே இரண்டு பகுதிகளை இணைத்து நிறைவு விழாவும், அடுத்த நாள் அடுத்த இரண்டு பகுதிகளுக்கு நிறைவு விழாவும் நடத்தலாம்.
பயிற்சி பெறக்கூடியவர்களிலேயே நாள் தோறும் ஒருவர் வரவேற்புரை, பொன்மொழி கள், நன்றி உரை, கூறுவதற்கு தயார் செய்ய வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு நான்கு பிரிவுகளில் 100 பேர் குறையாமல் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவரை நடந்த பயிற்சி வகுப்புகளில் 120 பேருக்கு மேல் பதிவு செய்தவர்களில் 80 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் இந்த பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 120 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும் என உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள்:
தீர்மானம் 1:
அறிவுலக ஆசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் விழாவினை திராவிடர்களின் தேசிய திருவிழாவாக எழுச்சியோடு கொண் டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2:
20.8.2021 முதல் 29.8.2021 வரை 10 நாள்கள் தமிழ்நாடு முழுதும் நான்கு பிரிவாக ஒரே சமயத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு இணைய வழியாக பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி,பகுத்தறிவு எழுத்தா ளர் மன்றம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் இணைந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது .
பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கான பொறுப்பாளர்கள்:
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மா.அழகிரிசாமி, வா.நேரு, இரா.தமிழ்ச் செல்வன், முனைவர் சி.தமிழ்ச்செல்வன், எஸ்.அருள்செல்வன்,எஸ்.ரமேஷ், வா.தமிழ் பிரபாகரன்.
பிரிவு 1
1. சென்னை மண்டலம்
2. காஞ்சிபுரம் மண்டலம்
3. வேலூர் மண்டலம்
4. தர்மபுரி மண்டலம்
5. சேலம் மண்டலம்
ஒருங்கிணைப்பாளர்கள்: அ.தா.சண்முக சுந்தரம், அண்ணா சரவணன், வா.தமிழ் பிரபாகரன், கோ.ஒளிவண்ணன் .
பிரிவு -2
1. விழுப்புரம் மண்டலம்
2. கடலூர் மண்டலம்
3. புதுச்சேரி மண்டலம்
4. காரைக்கால் மண்டலம்
5. அரியலூர் மண்டலம்
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.ரஞ்சித்குமார் ,கோபு.பழனிவேல்
பிரிவு -3
1. திருவாரூர் மண்டலம்
2. தஞ்சை மண்டலம்
3. திருச்சி மண்டலம்
4. புதுக்கோட்டை மண்டலம்
5. சிவகங்கை மண்டலம்
ஒருங்கிணைப்பாளர்கள்: கோபு.பழனி வேல், அ.சரவணன் ,
ச .மணிவண்ணன்
பிரிவு -4
1 . ஈரோடு மண்டலம்
2. கோவை மண்டலம்
3. திண்டுக்கல் மண்டலம்
4. மதுரை மண்டலம்
5. நெல்லை மண்டலம்
ஒருங்கிணைப்பாளர்கள்: கா.நல்லதம்பி, கே.டி.சி.குருசாமி, தரும.வீரமணி, ஆறுமுகம்
இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்:
பகுத்தறிவாளர்கழக மாநில துணைத்தலை வர்கள் மத்தூர் அண்ணா சரவணன், தாம்பரம் அ.தா.சண்முகசுந்தரம், புதுச்சேரி கு.ரஞ்சித்குமார், துறையூர் ச.மணிவண்ணன், மேட்டுப்பாளையம் தரும.வீரமணி, தஞ்சை கோபு.பழனிவேல், விருதுநகர் கா.நல்லதம்பி, நெல்லை கே.டி.சி.குருசாமி, சென்னை ஆறு முகம், ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் எஸ் .அருள்செல்வன் ,எஸ்.ரமேஷ் ,வா.தமிழ் பிரபாகரன் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன். தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் ராஜவேல் ஆகியோர் கருத்துரை வழங்கி பேசினார்கள்.
No comments:
Post a Comment