ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடுவீர்! - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடுவீர்!

இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்சவரம்பை நீக்க வேண்டும்!

நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

v7

புதுடில்லி, ஆக. 11- இட ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும் என மக்களவை யில் தி.மு. கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி யுள்ளார்.

ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.பி.சி இட ஒதுக் கீட்டை முடிவு செய்யும் உரிமையை மீண்டும் மாநிலங் களுக்கு வழங்கும் வகை யிலான மசோதா நேற்று  (10.8.2021) மக்கள வையில் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோதா நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளு மன்ற திமுக குழுத் தலை வர் டி.ஆர்.பாலு, முத் தமிழறிஞர் கலைஞர் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினரின் முன் னேற்றத் திற்காக பாடுபட்டதை நினைவு கூர்ந்தார்.

கலைஞர் உள்ளிட்ட வர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து வி.பி.சிங் ஆட்சியில் இதர பிற் படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித் ததை டி.ஆர்.பாலு சுட்டிக் காட்டினார். 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு சதவீதத்தை முடிவு செய் யும் அதிகாரம் முழுமை யாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment