டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து ஆணை வெளியிட மா நிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்.
· எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஏற்பாடு செய்த விருந்தில் திமுக, டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர். உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன.
டெக்கான் கிரானிகல், சென்னை:
· பருவ நிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழும் என அய். நா. அதிர்ச்சி அறிக்கை.
· கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முறையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பெகாசஸ் ஒட்டுக் கேட்பு குறித்து இன்று (10.8.2021) விசாரணையை துவங்குகிறது.
· இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கக்கேட்டு, விவாதம் நடத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
· சபரிமலை அர்ச்சகராக பார்ப்பனரல்லாதாரும் நியமிக்கப்பட வேண்டும் என பாஜகவின் கூட்டணிக் கட்சியான பாரத தர்ம ஜன சேனா வலியுறுத்தியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஜார்க்கண்ட் மாநில வேலைவாய்ப்பில் ஹிந்தி கட்டாய மொழி என்பது நீக்கப்பட்டுள்ளது. உருது மொழி தொடரும் என்று அறிவித்திருப்பதற்கு சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
தி இந்து:
· உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான கொலிஜியம் பரிந்துரைகளை ஒன்றிய அரசு தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
· சுகாதார கட்டமைப்பு குறித்த மாநில உரிமைகளை பாதிக்கும் பி-ஜி மருத்துவக் கல்வி விதிமுறைகள் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தி டெலிகிராப்:
· ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்திட கடிதம் எழுதி காத்திருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
· வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை சமமாக மதிப்பீடு செய்ததால் தோல்வி ஏற்பட்டுள்ளது என சிபிஎம் கட்சியின் மத்திய குழுவில் கருத்து ஏற்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment