காரைக்குடி, ஆக.1 காரைக்குடி சிந்தனைக்களம் சார்பில் 31.07.2021 மாலை 5.30 மணிக்கு ‘திராவிடத்தால் எழுந்தோம்‘ என்ற தலைப்பில் காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட பக தலைவர் சு. முழுமதி தலைமை வகிக்க மாவட்டதலைவர் ச.அரங்கசாமி , மண்டல செயலாளர் அ. மகேந்திரராசன் முன்னிலை வகித்தன ர். மாவட்ட செயலாளர் வைகறை அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் ந குமரன்தாஸ் தொடக்க உரை ஆற்றினார்.
கருத்தரங்க உரையில் கவிஞர் ம. மதிவண்ணன் (வெள்ளைக்குதிரை இதழாசிரியர்) திராவிடத்தின் மீதான அவதூறுகளை வரலாற்று தரவுகளோடும், புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களிருந்தும் மறுத்தார், பெரியார் நம் மக்களை கண்டித்ததெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து நல் வழிப்படுத்தவே ,அவர் அனைத்து மக்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை விரும்பினார். பெரியாரை, திராவிடத்தை எதிர்ப்பவர்களுக்கு உள்நோக்கம் மட்டுமே முதன்மையாக உள்ளது என்றார். தொடர்ந்து தோழர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார் . மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் புரூனோ என்னாரசு நன்றி கூறினார்.
நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பழனிவேல், நகர தலைவர் செகதீசன் , நகர செயலாளர் திக கலைமணி, கழக சொற்பொழிவாளர் தி என்னாரசு பிராட்லா, சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், பேராசிரியர் முசு கண்மணி, பேராசிரியர் பாண்டியராஜன், பேராசிரியர் கஸ்தூரிபா தேவசேனா, ஆ . பாலகிருஷ்ணன் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment