செயல் வடிவம் பெறும் திராவிடர் கழகக் கொள்கைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

செயல் வடிவம் பெறும் திராவிடர் கழகக் கொள்கைகள்

அன்புள்ளவிடுதலைஆசிரியர் அவர்களுக்கு, பணிவார்ந்த வணக்கம்.

இன்று பார்ப்பனீயம் வெளிப்படையாக எதிர்ப்பதை பொதுமக்கள் பார்க்க முடிகிறது. எல்லா ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி நமது தந்தை பெரியாரின் கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்த தி.மு.. தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர். திராவிடர் கழக கொள்கைள் செயல் வடிவம் பெற - அரசு ஏற்பு பெற இது ஒரு நல்ல சூழ்நிலையே!

எல்லா துறைகளிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ளதை சுட்டிக்காட்டி பல போராட்டங்களை அறவழியில் நடத்தியதன் பலனை தமிழர்கள் பெற்றுள்ளனர் என்பதை நாம் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும். திராவிடர் கழக தலைவரின் அருமையான அறிக்கைகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. பேட்டிகளும் தி.மு.. ஆட்சியின் சிறப்பை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக உள்ளன. 11.8.2021 விடுதலை தலையங்கம்மனித வதையைத் தடுத்திடுக, தனிச்சிறப்புள்ளது. பாவலர் சீனிபழனி அவர்கள் கட்டுரையை நன்கு உணர்ந்து அதை தலையங்கம் பகுதியில் வெளியிட்டது மேலும் பாராட்டுக்குரியது. உடலை வருத்திக் கொண்டு, காலத்தையும் வீணாக்கிக் கொண்டு திராவிட இனத்தைச் சேர்ந்த உடன் பிறப்புகள் வதைபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனர்கள் நமது திராவிடர்களது மூடபக்தியைக் கண்டு சிரிக்கிறார்கள் என்பதை உணராமல் உடலில், முதுகில் கொக்கிக்குத்தி உயரத்தூக்கி தொங்கிக் கொண்டு பக்தியை காட்சிப் பொருளாக்கி இருக்கும் முருகன் கடவுள் திருவிழாவில் நடந்ததை இதழ்கள் எல்லாம் வெளியிட்டன. எத்துணை காட்டுவிலங்காண்டித்தனம்! நம் உடன் பிறப்புகள் இந்த மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை அடைய வேண்டும்.

ஜாதி ஒழிப்பு கொள்கையின் மேன்மை அறியாமல் நடக்கும் ஜாதி ஆணவக் கொலைகளிலிருந்து நம் இனத்தை மீட்க வேண்டும். திராவிடர்கள் ஒன்று இணைந்து நிற்க உங்கள் ஒருவர் மூலமாக மட்டுமே செயல்படுத்த முடியும். பெரியாருக்குப் பின் அவரால் ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மணி நீங்கள் என்பதை புரிந்து எழுதுகிறேன். உங்கள் அகவையில் எத்துணை பணிகள் செய்கிறீர்கள் என்பதை உணருகிறேன். அயராது அய்யா வழியில் ஆக்க செயல்கள்! கரோனா தொற்று காலத்திலும் விடுதலை,  உண்மை, மாடர்ன்ரேஷனலிஸ்ட் இதழ்கள் மூலமும், கைப்பேசி ஊடகம் வழிகளிலும் நம் கழக செயல்பாடுளை அறிந்து அகம் மிக மகிழ்ந்தேன். மிகவும் அழகான வடிவில் 'உண்மை' வருகிறது. வாழ்க உங்கள் தொண்டு! வெல்க திராவிடம்! நமது பிறப்புரிமை 'இட ஒதுக்கீடு' வெற்றி பெற்று வருகிறது.

- தி.நா.அறிவரசு, பல்லடம்

No comments:

Post a Comment