நைஜிரியா, ஆக. 10- மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் வடக்கு மாகாணம் போர்னோ வின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 270 மாணவி களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற் படுத்தியது. மாணவிகளை மீட்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. இத னிடையே பயங்கரவாதி களுடன் நைஜீரிய அரசு நடத்திய பேச்சுவார்த் தைக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு 82 மாணவி கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் பல மாணவிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து தாமாகவே தப்பி வந்தனர்.
எனினும் 113 மாணவி கள் பயங்கரவாதிகளால் இன்னும் சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது.இந்த நிலையில் பயங்கரவாதி களால் கடத்தப்பட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு சிபோக் நகர பள்ளி மாணவி ஒருவர் விடுவிக்கப் பட்டு உள்ளதாக போர்னோ மாகாண ஆளுநர் பாப கானா ஜுலம் தெரிவித் துள்ளார். அந்த பள்ளி மாணவி, பயங்கரவாதி களின் சிறையில் இருந்த போது திருமணம் செய்து கொண்ட தனது கணவரு டன் இணைந்து அண் மையில் ராணுவத்திடம் சரணடைந்ததாக பாப கானா ஜுலம் தெரிவித் தார்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவியின் பெற் றோர் அவரது அடையா ளத்தை உறுதி செய்த பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆளு நர் கூறினார். மேலும், கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைந்தது, சிறை பிடிக்கப்பட்டிருக்கும் மற்ற மாணவிகளையும் கண்டுபிடிக்கும் நம்பிக் கையை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment