மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே

 மும்பை, ஆக. 2- மிரட்டும் வகையிலான பேச்சுகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம், அதுபோல பேசுபவர்க ளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மராட்டிய முதல் அமைச் சர் உத்தவ் தாக்கரே கூறி யுள்ளார்.

பாரதீய ஜனதா எம். எல்.சி. பிரசாத் லாட் மாகி மில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், "நான் எப்போது மாகிம் வந் தாலும் அதிக காவலர்கள் பாதுகாப்பு போடப்படு கிறது. நாங்கள் சேனா பவனை தகர்த்துவிடு வோம் என சிவசேனா வினர் பயப்படுகின்றனர். நேரம் வரும் போது, அதை நாங்கள் செய் வோம்’’ என்றார். பின்னர் அவர் சேனாவை இடிக் கும் வகையில் பேச வில்லை என விளக்கம் அளித்து காட்சிப்பதிவும் வெளியிட்டார்.

இந்தநிலையில் ஒர்லி யில் நடந்த பி.டி.டி. சீர மைப்பு திட்ட தொடக்க விழாவில் முதல்- அமைச் சர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பிரசாத் லாடின் கருத்து குறித்து ஆவேசமாக பேசினார். மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொள்ள மாட்டோம், அதுபோல பேசுபவர்க ளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என் றார். இதேபோல அவர், தபாங் படத்தில் இடம் பெற்று இருக்கும், 'தபாட் சே டர் நஹி லக்தா (அறை வதற்கு பயம் இல்லை) ' என்ற வரிகளையும் குறிப் பிட்டார்.

மேலும் அவர் கூறிய தாவது:- நீங்கள் தாக்கி னால், எழுந்து நிற்க முடி யாத அளவிற்கு உங்களை திருப்பி அடிப்போம். எனவே எங்களை அறை வது போன்ற பேச்சை ஒருவரும் பேசக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment