ஜெனிவா, ஆக. 10 இந்தியா வில் இன்னும் சில ஆண்டுகளில் பருவநிலை மாறுதலால் கடும் பாதிப்பு ஏற்படும் என பன் னாட்டு நிபுணர் குழு எச்சரித் துள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே பருவநிலை மாற் றத்தால் தொடர்ந்து பல பாதிப்புக்களைச் சந்தித்து வரு கின்றன. குறிப்பாக வெப்ப நிலை அதிகரிப்பால் பனிப் பாறைகள் வேகமாக உருகு கின்றன. ஆசியாவில் உள்ள நாடுகளில் முன்பை விட மழை மற்றும் புயல் அதிகரித்துள்ளது. தற்போது பருவநிலை மாற் றங்களுக்கான பன்னாட்டு அர சுகளின் குழுவான அய்.பி.சி.சி தனது ஆய்வு முடிவை ஜெனி வாவில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மனி தர்களின் செயலால் வருங் காலத்தில் புவி எதிர்கொள்ள வுள்ள மாற்றங்கள் குறித்து அச்சமூட்டும் வகையில் தெரி விக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை குறித்து ”கடந்த 1850-_1900 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது வெப்பநிலை அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் குளிரின் தீவிரம் குறைந்துள்ள அதேவேளை யில், வெப்பத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது.
இந்நிலை வரும் காலங் களிலும் தொடரும். ஆசியா வின் பெரும்பகுதியில் சராசரி மற்றும் அதிக மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக் கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் வறட்சி களும் இந்தியத் துணைக் கண்டனத்தில் ஏற்படக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.
வெப்ப மயமாதல் மனி தர்களின் செயலால் தான் அதிகரித்துள்ளது என்பது தற் போது நன்கு வெளிப்படுத்தப் பட்டு ள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சூழல் மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குநரும் அறிக் கையின் ஆசிரியர்களில் ஒரு வருமான டாக்டர் ஃப்ரை டெரிக் ஓட்டோ கூறியுள்ளார். அனல் காற்று, அதீத மழை, பஞ்சம் ஆகியவற்றை நாம் பார்த்து வருகிறோம். இதில் சில மாற்றங்களை நம்மால் சரி செய்ய முடியாது. வெப்ப நிலையை 1.5 டிகிரி செல் சியஸாக கட்டுப்படுத்தினாலும், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களை நாம் பார்க்கத் தான் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், ”இந்து குஷ் இமயமலையில்பனிப்பாறைகளில் ஏற் படும் பாதிப்பு, கடல் மட்டம் உயர்வு, புயல்களால் ஏற்படும் வெள்ளப் பாதிப்பு, சீரற்ற பருவமழை, கடுமையான வெப்ப அழுத்தம் ஆகியவை சமீப காலத்தில் இந்தியாவைப் பாதிக்கக்கூடும் வெப்ப மய மாதல், அதீத மழை காரண மாகப் பனி ஏரிகளில் வெள்ள ப்பெருக்கு ஏற்படுவதும் நிலச் சரிவுகள் ஏற்படுவதும் அதிகரிக் கும் தவிர அரபிக் கடல் மற் றும் வங்கக் கடலை உள்ள டக்கிய இந்தியப் பெருங்கடல் பூமியின் சராசரியை விட வேக மாக வெப்பமாகி வருகிறது எனவே, கடற்கரையோர பகுதி களில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது'' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment