பொள்ளாச்சி, ஆக. 31- பொள்ளாச்சி யில் திராவிட மாணவர் கழக புதிய கிளை தொடங்கப்பட்டது. 15.8.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பொள் ளாச்சி நகரில் உள்ள பெரியார் பற்றாளர் பொள்ளாச்சி நகர திமுக இளைஞரணி தலைவர் சரவணன் அவர்களது அய்டி நிறுவன அரங்கத்தில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டி யன் தலைமையில் நடைபெற்றது.
கோவை மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல் அனைவரையும் வரவேற்றார். சந்திப்புக் கூட்டத்தில் பெரியா ரியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் பய னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக ‘அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கிடைத்த மகிழ்வாக’ அனைத்து மாணவர்களுக்கும் பொதுக் குழு உறுப்பினர் பொள்ளாச்சி பரமசிவம் அவர்களின் மகன் அருண் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். கூட்டத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், ‘மாணவர்கள் ஏன் திராவிட மாணவர் கழகத் தில் இணைய வேண்டும்‘ என விரிவாக தொடக்க உரை நிகழ்த்தினார். கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல் வன். தந்தை பெரியார் தொடங் கிய போராட்டங்களி;ன் வழி யாக இன்றைய தினம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கிடைத்த அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் உரிமை பற்றியும் மாண வர்களுக்கு திராவிடர் கழக சாதனைகளையும் எடுத்துக் கூறி மிக எழுச்சியுடன் சிறப் புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மண்டல செயலாளர் சிற்றரசு, பொதுக் குழு உறுப்பினர் பொறியாளர் பரமசிவம், மண்டல இளை ஞரணி செயலாளர் வழக்குரை ஞர் பிரபாகரன், , மாவட்டச் செயலாளர் திக செந்தில்நாதன், மாவட்டத்துணைத்தலைவர் ஜமீன் ஊத்துக்குளி மாரிமுத்து, மாவட்ட தொழிலாளரணித் தலைவர் ஆனந்தசாமி, அய்டி யெம் தலைவர் சரவணன், தஞ்சை மாவட்ட மாணவர் கழக செயலாளர் ஜெ.மானவீரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோவை மாவட்ட மாணவர் கழக தலை வர் த.க.கவுதம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அரைநூற்றாண்டு காலமாக இடைவிடாமல் தொடர்ந்து போராடி அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆக சட்ட உரிமையை பெற்று தந்த தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு இக்கூட்டம் தனது நன் றியை தெரிவித்துக் கொள்கிறது.
2. அரை நூற்றாண்டு கால திராவிடர் கழகத்தின் கோரிக் கையை ஏற்று தந்தை பெரியா ரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி தகுதியுள்ள அனைத்து ஜாதியினர் 58 நபர்களுக்கு அர்ச் சகராக பணி நியமன ஆணை வழங்கிய தலைவர் கலைஞரின் கனவை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் தள பதி மு.க.ஸ்டாலின் அவர்களை இக்கூட்டம் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறது.
கோவை மாவட்ட, பொள் ளாச்சி நகர, கல்லூரி மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கோவை மாவட்ட மாணவர் கழக தலை வர் த.க. கவுதமன், மாவட்ட மாணவர் கழக துணை தலை வர் ர. வின்சென்ட், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வெ.யாழினி, மாவட்ட மாண வர் கழக துனைச் செயலாளர் ச. வசந்த்குமார், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ஞா. தமிழ்ச்செல்வன், பொள் ளாச்சி நகர மாணவர் கழக தலைவர் ர.திவ்யவாசுகி, பொள் ளாச்சி நகர மாணவர் கழக அமைப்பாளர் ஆ.பேரறிவா ளன், பி.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் வீ. வருண், என்.ஜி.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் வீ.வர்சீனி.
No comments:
Post a Comment