ஒட்டவா, ஆக. 11- இந்தியாவில் டெல்டா வகை கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது.
ஜூலை 21 ஆம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்டம்பர் 21 வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை மிரட்டும் லூபிட் புயல்
டோக்கியோ, ஆக. 11- சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது. இந்த புயல் ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லூபிட் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் லூபிட் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
புயல் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூறிய 3 பிராந்தியங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளி யேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே லூபிட் புயல் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
No comments:
Post a Comment