தமிழ் அர்ச்சனைக்கான பாடல் நூல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

தமிழ் அர்ச்சனைக்கான பாடல் நூல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, ஆக.13 -   தமிழ் அர்ச்சனைக் கான போற்றி பாடல் நூல்களை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார். இதன்மூலம் கோவில்களில் தமிழ் அர்ச்சனை எனும் பக்தர்களின் விருப்பம் நிறைவேறுகிறது.

போற்றி பாடல் நூல்கள்

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய விருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை கடந்த 3ஆம் தேதி முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து முதற்கட்ட மாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோவில்களில் அர்ச்சகர்களின் விவரங் கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப் பட்டு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள் ளது. அதன் தொடர்ச்சியாக, பக்தர் களின் விருப்பத்துக்கேற்ப, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 போற்றி பாடல் நூல்களை முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (12.8.2021) வெளியிட்டார்.

இந்த முயற்சியின் மூலம், கோவில் களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப் படுவதுடன், பொதுமக்களும் தமிழ் மொழி மூலம் அர்ச்சனை என்பதால் அகமகிழ்வார்கள்.

அறிந்த மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள் வதற்காகவும் இந்த போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங் கேற்றனர்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment